ETV Bharat / technology

பாக்கெட் உணவுப் பொருட்களில் இதை கவனித்துள்ளீர்களா? ஃபுட் லேபிள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? - Food Label

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 4, 2024, 2:10 PM IST

How To Read Food Label: இன்று நாம் கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களில் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளே அதிக அளவில் இருக்கின்றன. அப்படி பல பொருட்கள் விற்கப்படும் இடத்திலிருந்து சரியான ஒரு பொருளை தேர்ந்தெடுப்பதற்கு பெரிதும் உதவியாக இருப்பது ஃபுட் லேபிள்களே. அப்படியான இந்த ஃபுட் லேபிள்களில் உள்ள தகவலை அறிந்துகொள்ளும் முறைகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

food labels related file image
food labels related file image (Credits - ETV Bharat Getty Images)

ஹைதராபாத்: நம்மில் பலருக்கும் உணவு பாக்கெட்டுகளின் மீது ஒட்டப்பட்டுள்ள ஃபுட் லேபிள்களை (Food Labels) படிப்பது மிகப்பெரிய விசயமாக தோன்றலாம். ஆனால், நல்ல தரம் வாய்ந்த உணவு பற்றிய தகவல்களை அறிந்து அதனை வாங்குவதற்கு ஃபுட் லேபிள்களை படிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே ஃபுட் லேபிள்களில் உள்ள தகவலை படிக்க உதவும் படிப்படியான வழிகாட்டு முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

படி 1 - பரிமாறும் அளவைச் சரிபார்த்தல் (Check the Serving Size):

பரிமாறும் அளவு என்பது ஒரு பரிமாற்றத்தில் உள்ள உணவின் அளவே தவிர, அதன் பரிந்துரை அல்ல. கலோரி மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளலைத் துல்லியமாகக் கணக்கிட ஃபுட் லேபிள்களில் உள்ள இந்த பரிமாறும் அளவு குறித்து புரிந்துகொள்வது அவசியம். மேலும், குறிப்பிட்ட உணவின் பரிமாறும் அளவு என்பது கோப்பை (cup), கிராம் (gram), துண்டுகள் (pieces) மற்றும் ஒரு கொள்கலனில் (container) பரிமாறும் எண்ணிக்கை என்று மாறுபடும். எனவே, உணவு பாக்கெட்டுகளின் மீது ஒட்டப்பட்டுள்ள ஃபுட் லேபிள்களில் கொடுக்கப்பட்டுள்ள அந்த உணவின் பரிமாறும் அளவை அறிந்துகொள்வது மூலம் அந்த உணவை தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும்.

படி 2 - கலோரிகள் குறித்து அறிதல் (Look at the Calories):

பொதுவாக தினசரி கலோரி உட்கொள்ளல் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எனவே, பரிமாறும் உணவில் உள்ள கலோரிகளின் எண்ணிக்கையை சரிபார்க்கவும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதற்கு உடலின் தேவைகளுக்கு ஏற்ப கலோரி உட்கொள்ளலை சரிபார்க்கவும் ஃபுட் லேபிள்களில் கொடுக்கப்பட்டுள்ள கலோரிகள் குறித்த விவரங்கள் பெரும் உதவிபுரிகிறது.

படி 3 - அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கண்டறிதல் (Identify Essential Nutrients):

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் செரிமானத்துக்கு உதவும் நார்ச்சத்து, எலும்பின் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் டி, எலும்புகளுக்கு வலுவூட்டும் கால்சியம் சத்து, ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை பெறுவதற்கு இன்றியமையாததாக உள்ள இரும்பு சத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நீங்கள் கடைகளில் வாங்கும் பாக்கெட் உணவுகளில் உள்ளதா என்று ஃபுட் லேபிள்களின் மூலம் எளிதில் கண்டறிய இயலும்.

படி 4 - ஆரோக்கியமற்ற ஊட்டச்சத்துக்களை தவிர்த்தல் (Limit Unhealthy Nutrients):

அளவோடு சேர்க்க வேண்டிய அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஊட்டச்சத்துக்களை அறிந்து கொள்வது என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு பெருதவிபுரியும். அதன்படி இதய நோய்களை அதிகரிக்கும் சாச்சுரேட்டட் கொழுப்பு (Saturated Fat), உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் சோடியம் மற்றும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் ஆடட் சுகர் (Added Sugars) போன்றவை உள்ள உணவுகளை தவிர்ப்பது மிக நல்லது.

படி 5 - சதவீத தினசரி மதிப்பு குறித்த புரிதல் (Use the Percent Daily Value - %DV):

%DV என்று கூறப்படும் சதவீத தினசரி மதிப்பானது உங்கள் தினசரி உணவில் ஒரு ஊட்டச்சத்து எவ்வளவு பங்களிக்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது. இது 2,000 கலோரி உணவை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அதற்கேற்ப உணவை உட்கொள்ளுதல் மிகச்சரியானதாக இருக்கும். குறிப்பாக, 5% DV அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் சதவீத தினசரி மதிப்பு குறைவானதாக இருக்கும். அதுவே 20% DV அல்லது அதற்கு மேல் காணப்பட்டால் சதவீத தினசரி மதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று பொருள்.

படி 6 - ஒரே மாதிரியான உணவுகளை ஒப்பிடுதல் (Compare Similar Foods):

ஒரே மாதிரியான தயாரிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்க சதவீத தினசரி மதிப்பை (%DV) பயன்படுத்தவும். இதன் மூலம், நீங்கள் விரும்பும் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீங்கள் விரும்பாதவற்றில் குறைவான ஊட்டச்சத்துக்களை தேர்வுசெய்ய உதவும்.

கூடுதல் குறிப்புகள்:

  • டூயல்-காலம் ஃபார்மேட் அல்லது சிங்கிள்-இங்கிரிடியண்ட் சுகர் போன்ற லேபிள் மாறுபாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
  • ஆடட் சுகரின் அளவுகள், செயற்கை சுவைகள் மற்றும் பதப்படுத்தல் ஆகியவற்றிற்காக சேர்க்கப்பட்ட மூலப்பொருட்களின் பட்டியலைச் சரிபார்க்கவும்.
  • குறைந்த சோடியம் அல்லது நல்ல நார்ச்சத்து உள்ளதற்கான சான்றிதழ்களை சரிபார்ப்பதன் மூலம் தரமான உணவை தேர்ந்தெடுக்க உதவியாக இருக்கும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதாலும், ஃபுட் லேபிள்களைப் படிப்பதாலும், உங்கள் உணவைப் பற்றிய தகவலறிந்த முடிவுகளை எடுப்பதில் நீங்கள் ஒரு நிபுணராக மாறுவீர்கள். நினைவில் கொள்ளுங்கள், ஆரோக்கியமான உணவு என்பது சமநிலை மற்றும் பல்வேறு வகை ஊட்டச்சத்துக்களை சார்ந்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: இனிமே இத செக் பண்ணாம சமையல் பாத்திரம் வாங்காதீங்க.. ஐஎஸ்ஐ தர முத்திரை பெறுவது கட்டாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.