ETV Bharat / technology

பணியிடத்தில் பிரச்சினையா? அப்போ இத பண்ணுங்க பெண்களே..! - National Women Commission - NATIONAL WOMEN COMMISSION

How to File Online Complaint In NWC: பணியிடம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்கள் தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பது குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 12:36 PM IST

ஹைதராபாத்: பெரும்பாலான பெண்கள் பணியிடங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் வன்முறையை எதிர்கொள்வது பொது கருத்தாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில், என்ன செய்வது? யாரை அணுகுவது? என்று பலருக்கும் தெரியாது. ஆனால், பாலியல் வன்கொடுமை, பாலின பாகுபாடு மற்றும் குடும்ப வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, பாதிக்கப்படும் பெண்கள், தேசிய மகளிர் ஆணையத்தை (NWC-National Women Commission) அணுகினால், அவர்களுக்கு தேவையான சட்ட உதவியும், தீர்வும் வழங்கப்படும்.

இதற்காக அவர்கள் நேரடியாகத்தான் சென்று புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கலாம். அந்தவகையில் தேசிய மகளிர் ஆணையத்திடம் இருந்து உதவி பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் மற்றும் ஆன்லைனில் புகார் செய்வது எப்படி என்பதை ஒவ்வொரு 5 படிநிலைகளில் அறிந்துகொள்ளலாம்

படிநிலை 1: http://ncw.nic.in அல்லது http://ncwapps.nic.in என்ற தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று, 'ஆன்லைன் புகார் பதிவுக்கான வழிமுறைகள்' (instructions for online complaint registration) என்பதைக் கிளிக் செய்யவும்.

படிநிலை 1
படிநிலை 1 (Credits - NWC)

படிநிலை 2: கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் படித்த பிறகு, 'புகார் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்' (click here for registration of complaint) என்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்சனை கிளிக் செல்லவும்.

படிநிலை 2
படிநிலை 2 (Credits - NWC)

படிநிலை 3: பின்வரும் படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிடவும். யார் மீது புகார் அளிக்கப்படுகிறதோ, அந்த நபர் குறித்த விவரம் தெரிந்தால், அதையும் குறிப்பிடலாம். மேலும், நடந்த சம்பவம் பற்றிய முழுமையான விளக்கத்தை அளிக்க விண்ணப்பப் படிவத்துடன் தனி பத்தியும் கொடுக்கப்பட்டுள்ளது.

படிநிலை 3
படிநிலை 3 (Credits - NWC)

படிநிலை 4: புகார் விவரங்களை கொடுத்த பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாவை (Captcha) என்டர் செய்து 'சமர்ப்பி' (Submit) என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இதைச் செய்த பிறகு, உங்கள் புகார் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்படும்.

படிநிலை 4
படிநிலை 4 (Credits - NWC)

அதன் தொடர்ச்சியாக உங்களுக்கு ரசீது எண் (Receipt Number) வழங்கப்படும். மேலும், நீங்கள் கொடுத்த புகாரை மகளிர் ஆணையம் ஏற்றுக்கொண்டால், பத்து நாட்களுக்குப் பிறகு உங்கள் புகார் குறித்த கோப்பு எண் (File Number), பயனர் ஐடி (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) உங்களுக்கு வழங்கப்படும். ஆனால், உங்களது புகார் நிராகரிக்கப்பட்டால், அதுகுறித்து புகார்தாரர்களுக்கு அறிவிக்கப்படும்.

படிநிலை 5: புகாரை மகளிர் ஆணையம் ஏற்றுக்கொண்டு கொடுக்கப்பட்டதும், தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தி உள்ள 'புகார் நிலை' (Complaint Status) பகுதிக்கு சென்று, அதில் கொடுக்கப்பட்ட பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சாவை பதிவிட்டு சைன் இன் (sign in) என்ற ஆப்சனை கிளிக் செய்தால் கொடுக்கப்பட்ட புகாரின் நிலை குறித்து அறிந்துகொள்ளலாம்.

படிநிலை 5
படிநிலை 5 (Credits - NWC)

மகளிர் ஆணையத்தின் பொறுப்புகள்:

  • காவல்துறை விசாரணையை விரைவுபடுத்துவது.
  • புகார்கள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது.
  • குடும்ப தகராறுகளில் சமரசம் செய்து ஆலோசனை வழங்குதல்.
  • பணியிட பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பெண்களுக்கான உறிய தீர்வை வழங்குதல்.
  • பாலியல் வன்கொடுமை புகார்களின் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவது.
  • கடுமையான குற்றங்களில், சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தி, ஆதாரங்களை சேகரித்து, பரிந்துரைகளுடன் அறிக்கை சமர்ப்பிக்க விசாரணைக் குழு அமைத்தல்.
  • பெண்களுக்கு இலவச சட்ட உதவி வழங்குதல்.

தேசிய மகளிர் ஆணையம் மேற்கொள்ளும் புகார்கள்:

  • கற்பழிப்பு / கற்பழிப்பு முயற்சி
  • ஆசிட் தாக்குதல்
  • பாலியல் தாக்குதல்
  • பாலின பாகுபாடு
  • பின்தொடர்தல்/பாலியல் துன்புறுத்தல்
  • கடத்தல்/கட்டாய விபச்சாரம்
  • பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள்
  • பெண்களுக்கு எதிரான காவல்துறை அலட்சியம்
  • குடும்ப வன்முறை / வரதட்சணை கொடுமை/ வரதட்சணை மரணம்
  • இருதார மணம் / பலதார மணம்
  • பெண் சிசுக்கொலை
  • பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்
  • பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் மறுக்கப்படுதல்

தேசிய மகளிர் ஆணையம் நிராகரிக்கும் புகார்கள்:

  • தெளிவற்ற, பெயரிடப்படாத அல்லது மாற்றுப்பெயர் இல்லாத புகார்கள்
  • சிவில் தகராறுகள் தொடர்பான விஷயங்கள்
  • நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு
  • மாநில ஆணையம் அல்லது வேறு ஏதேனும் ஆணையத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட புகார்கள்
  • மற்ற ஆணையங்களால் உறுதிப்படுத்தப்பட்ட புகார்கள்
  • பெண்களின் உரிமைகளை மீறாத புகார்கள்

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பெண்களே.. பயணத்தின்போது இவை உங்களுடன் இருந்தால் நீங்கள் 100% சேஃப்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.