ETV Bharat / technology

சிறந்த 5ஜி போன்கள்: ரூ.11,000 இருந்தா போதும்... சூப்பர் ஸ்மார்ட்போன் வாங்கலாம்! - Phones under 15000 5G - PHONES UNDER 15000 5G

பட்ஜெட் விலையில், அதுவும் ரூ.15,000 விலையின் கீழ் சிறந்த 5ஜி போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரிய பேட்டரி, சிறந்த கேமரா போன்ற பல அம்சங்களை இந்த வகை ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளன.

PHONES UNDER 15000 5G
ரூ.15,000 விலையின் கீழ்வரும் சிறந்த 5ஜி போன்கள் (Credits: ETV Bharat)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 17, 2024, 12:06 PM IST

என்னதான் ஐபோன், பிக்சல், சாம்சங் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், பெருவாரியான மக்களால் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களே அதிகம் கவனத்தில் கொள்ளப்படுகிறது. அந்தவகையில், உங்களுக்காக ரூ.15,000-க்கும் குறைவாக சந்தையில் விற்பனை செய்யப்படும் சிறந்த 5ஜி போன்களின் பட்டியலை எடுத்து வந்துள்ளோம்.

இதில் தரமான வடிவமைப்பு, சிறந்த பேட்டரி, தெளிவான டிஸ்ப்ளே, விலைக்கேற்ற கேமரா போன்ற சிறப்பம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு பட்டியல் உருவாக்கப்பட்டது. எனவே, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival) மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே 2024 (Flipkart Big Billion Day 2024) சலுகை தினங்களும் அடுத்தடுத்த நாள்களில் வருவதால், நல்ல சலுகையில் இந்த ஸ்மார்ட்போன்களை நம்மால் வாங்க முடியும்.

சாம்சங் எம்34 5ஜி (Samsung M34 5G):

கொரிய நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்34 5ஜி மாடலில் பல அம்சங்கள் உள்ளன. 6.5-இன்ச் முழுஅளவு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், சாம்சங் எக்சினாஸ் 1280 சிப்செட், 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், பின்பக்கம் 50 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் சென்சார்கள் அடங்கிய மூன்று கேமராக்கள், 13 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை கிடைக்கும். ஸ்மார்ட்போனை அதிக நேரம் இயக்க பெரிய 6,000 mAh பேட்டரி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் (Flipkart shopping) தளத்தில் விற்பனைக்கு இருக்கும் சாம்சங் எம்34 5ஜி ஸ்மார்ட்போனை பயனர்கள் ரூ.14,500 என்ற விலைக்கும் கீழாக வாங்க முடியும்.

Samsung M34 5G
சாம்சங் எம்34 5ஜி மொபைல் (Credits: Samsung India)

ரியல்மி நார்சோ 70 5ஜி (Realme Narzo 70 5G):

சீனாவின் பிபிகே நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போனும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன், மீடியாடெக் டிமென்சிட்டி 7050 சிப்செட், 6.67-அங்குல முழுஅளவு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், பின்பக்கம் 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் சென்சார்கள் அடங்கிய இரட்டை கேமராக்கள், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை கிடைக்கும். இதில் 5,000 mAh பேட்டரி கிடைக்கிறது. அமேசான் இந்தியா ஷாப்பிங் (Amazon India shopping) தளத்தில் விற்பனைக்கு இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் சுமார் ரூ.13,500 என்ற விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க: ஜிபிஎஸ் முதல் AI வரை: கால்பந்து அனுபவத்தை வேற லெவலாக்கும் புதுமையான டெக்னாலஜிகள்!

மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G):

பட்ஜெட் மோட்டோ ஜி34 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 6.5-அங்குல எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி 120 Hz ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் என இரட்டை சென்சார் அடங்கிய பிரைமரி கேமரா, 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, டர்போ பவர் சார்ஜிங் ஆப்ஷனுடன் வரும் 5,000 mAh பேட்டரி போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து இந்த ஸ்மார்ட்போனை சுமார் ரூ.11,500 எனும் சலுகை விலையில் வாங்கலாம்.

Moto G34 5G
மோட்டோ ஜி34 5ஜி மொபைல் (Credits: Motorola India)

ஐக்யூ இசட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G):

வெறும் ரூ.10,500 செலுத்தினால், இந்த ஐக்யூ Z9 லைட் 5ஜி போனை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு இருந்தால், 9,998 ரூபாய்க்கு இந்த போனை வாங்க முடியும். மீடியாடெக் டிமென்சிட்டி 6300 5ஜி ஆக்டோகோர் சிப்செட், பின்பக்கம் 50 மெகாபிக்சல் சோனி பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி கேமரா, டைப்-சி சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ஆப்பிள் iOS 18 வரப்போகுது; அப்டேட் கிடைக்கும் ஐபோன் மாடல்களின் பட்டியல் வெளியீடு!

சியோமி ரெட்மி 13சி 5ஜி (Xiaomi Redmi 13C 5G):

சியோமி ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனானது, மீடியாடெக் டைமென்சிட்டி 6100 சிப்செட், 6.74-அங்குல ஐபிஎஸ் எல்சிடி 90 Hz டிஸ்ப்ளே, பின்பக்கம் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் அடங்கிய இரட்டை கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன. எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் இருந்து சுமார் ரூ.10,500 என்ற விலையில் வாங்க முடியும்.

Xiaomi Redmi 13C 5G
சியோமி ரெட்மி 13சி 5ஜி மொபைல் (Credits: Xiaomi India)

போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G):

சிறந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 உடன் வரும் போக்கோ எம்6 ப்ரோ ஸ்மார்ட்போனில், 6.79-அங்குல எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி 90 Hz ரெப்ரெஷ் ரேட் உடன் கூடிய டிஸ்ப்ளே, 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார், 5,000 mAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனை ஜியோ மார்ட் (JioMart) தளத்தில் இருந்து ரூ.10,499 என்ற விலையில் வாங்கலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.