பல அற்புதங்கள் புவியில் பெருகிக் கிடக்கிறது என்றால், இதற்கு வெளியேயும் அதிசயங்கள் நிறைந்திருக்கிறது. அப்படி மக்களால் அதிசயித்து பார்க்கப்பட்ட ஒன்று தான் காமெட் (Comet). வானில் தெரிந்து இதை மக்கள் பிரம்மிப்புடன் வெறும் கண்களால் பார்த்து மகிழ்ந்தனர்.
காமெட் என்பது வால் நட்சத்திரம் என்று தமிழில் அறியப்படுகிறது. இது சூரியனைச் சுற்றி வரும் தூசி, பனி மற்றும் பாறை ஆகியவற்றால் ஆன ஒரு வான் அமைப்பு ஆகும். இதை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு ஆகிய பகுதியில் கண்ட மக்கள், புகைப்படங்களை எடுத்து தங்களின் எக்ஸ் (X, formely Twitter) தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
வியப்பில் மக்கள்:
ஆச்சரியமூட்டுவது என்னவென்றால், 80 ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை தான் இந்த நிகழ்வைக் காண முடியுமாம்! இன்னும் சில நாள்களுக்கு வெறும் கண்களால் இதைப் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு காமெட் சி/2023 ஏ3, வால் நட்சத்திரன் சுச்சின்ஷான்-அட்லாஸ் (Comet C/2023 A3, also known as Comet Tsuchinshan- ATLAS) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதை முதன்முதலில் சீனாவில் உள்ள சுச்சின்ஷான் ஆய்வகம் மற்றும் அட்லாஸ் சர்வே, செப்டம்பர் 27 அன்று சூரியனுக்கு மிக அருகில் பூமியை நோக்கி வந்துபோது கண்டுபிடித்தது. இது பூமியில் இருந்து 129.6 கிலோமிட்டர்கள் தொலைவில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இனி எப்போது பார்க்கலாம்?
அக்டோபர் 2 வரை இதை வானில் காணலாம். மீண்டும் அக்டோபர் 12 முதல் அக்டோபர் 26 வரை வால் நட்சத்திரங்கள் பூமியை நெருங்கும்போது பார்க்கலாம். சூரிய உதயத்திற்கு முன்னரே இதை பார்ப்பது சிறந்ததாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, காலை 4:40 முதல் 5:30 வானில் இது தென்பட்டால் தெளிவாகத் தெரியும் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது.
This morning, I captured another image of Comet C/2023 A3 (Tsuchinshan-ATLAS) from the @LCOAstro site in the Atacama Desert, Chile 🇨🇱✨😱. The view was absolutely stunning !!! The comet is clearly visible visually. My gear: Nikon D810a camera with a 135mm lens. Exposure: 20 x 30… pic.twitter.com/lieSFHEP1W
— Yuri Beletsky (@YBeletsky) September 26, 2024
இதையும் படிங்க |
"வால் நட்சத்திரங்களை காண்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க, வானில் தெளிவான பார்வையை வழங்கும் திறந்த வெளிக்குச் சென்று (மொட்டை மாடி) கிழக்கு வான் பகுதியில் பார்க்க வேண்டும். நகரத்தின் விளக்குகள் ஜொலிப்பது உங்கள் கண்களுக்குள் அகப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்." என்று பின்னெல்லி கூறினார்.
With the waning moon casting a gentle glow at 30% illumination, Comet C/2023 A3 (Tsuchinshan-ATLAS) graced the sky, accompanied by the silhouette of the majestic Villarrica volcano, hundreds of satellites, and fleeting meteors. The scene was further illuminated by the soft hues… pic.twitter.com/TOqHNRy3Rr
— Erika (@ExploreCosmos_) September 30, 2024
இந்தியாவில் காமெட்டைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் தான் வானியல் புகைப்பட நிபுணரான உபேந்திரா பின்னெல்லி, என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.