ETV Bharat / technology

ஆப்பிள் ஐஃபோன் 16 வெளியீட்டு நிகழ்வு - வெளியான விலை விவரம்! - apple iphone 16 launch

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 9, 2024, 8:04 PM IST

Apple Event 2024: டெக் விரும்பிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இன்று வெளியாகும் நிலையில், ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலை, ஐஓஎஸ் 18 (iOS 18) வெளியீடு தொடர்பான தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

Apple Event 2024
Apple Event 2024 (Credits: Apple)

ஹைதராபாத்: ஆப்பிள் நிறுவனம் இன்று (செப்டம்பர் 9) ‘இட்ஸ் குளோடைம்’ (It's Glowtime) எனும் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதால், டெக் விரும்பிகள் பலரும் இந்த நிகழ்விற்காகக் காத்திருக்கின்றனர். இந்நிகழ்வில், ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, நான்காம் தலைமுறை ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்குதளம் ஆகியவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஆப்பிள் நிர்வகிக்கும் ‘இட்ஸ் குளோடைம்’ நிகழ்வை எப்படி நேரலையில் காண்பது, ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன விலையில் அறிமுகமாகும், புதிய அப்டேட்டுகள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்

ஆப்பிள் ‘இட்ஸ் குளோடைம்’ நிகழ்வு (Apple Event 2024)

ஆப்பிள் ‘It's Glowtime’ நிகழ்வு செப்டம்பர் 9 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நேரப்படி காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்தியாவில், செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 10:30 மணி முதல் ஆப்பிள் 2024 நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி ஆப்ஸ் வாயிலாகவும் நிகழ்வை நேரலையில் பார்க்கலாம். கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் இந்த நிகழ்வை நடத்துகிறது. இந்த இடம் ஆப்பிளின் முக்கிய வெளியீடுகளுக்கான இடமாகவும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மையமாக செயல்படுகிறது.

apple ios 18
apple ios 18 (Credits: Apple)

என்னென்ன அறிமுகம் செய்யப்படுகிறது?

மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 16 சீரிஸ் இந்த நிகழ்வில் வெளியாகிறது. அதில் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அடங்கும். அதுமட்டுமில்லாமல், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனுடன் நான்காம் தலைமுறை ஏர்பாட்ஸ் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் ஐஓஎஸ் 18 இயங்குதளத்தையும் ஆப்பிள் அறிமுகம் செய்கிறது.

iPhone Satellite Messaging
iPhone Satellite Messaging (Credits: Apple)

ஐஃபோன் 16 விலை (iPhone 16 price in India)

கடந்த ஆண்டின் ஐபோன் 15 ப்ரோ 3x ஜூம் உடன் ஒப்பிடும்போது இந்தாண்டு ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போனின் 5x ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ கேமரா கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் ப்ளூம்பெர்க் செய்தியாளர் மார்க் குர்மனின் எக்ஸ் பதிவு ஒன்று, ஐபோன் 16 ப்ரோ மாடல் விலையை கசியவிட்டுள்ளது. அதன்படி, ஐபோன் 16 ப்ரோ விலை கடந்த ஆண்டைப் போலவே 999 அமெரிக்க டாலர்களில் தொடங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் மேலும் பல செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள், ஆப்பிளின் பிரத்யேக ஏ18 பயோனிக் சிப்செட் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வெளியாகும் பிற ஆப்பிள் கேட்ஜெட்ஸின் அம்சங்கள்

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஆனது பெரிய திரை அளவுகள், மெல்லிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பேட்டரி ஆயுளைக் கொண்டிருக்கும். தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலைக் கண்டறிதல் போன்ற புதிய ஆரோக்கிய வாழ்விற்கான அம்சங்கள் இணைக்கப்படுகிறது. அதேபோல, ஆப்பிள் நான்காவது தலைமுறை ஏர்போட்களை அறிவிக்கும்பட்சத்தில், சிறந்த ஆடியோ தரம், மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் கேன்சலேஷன், யுஎஸ்பி டைப்-சி ஆதரவு ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க: பணியிடத்தில் பிரச்சினையா? அப்போ இத பண்ணுங்க

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.