ETV Bharat / state

திமுக கவுன்சிலர் கணவருக்கு கத்திக்குத்து.. பேரூராட்சி தலைவர் மகன் தலைமறைவு! - theni

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 12:46 PM IST

Updated : Jul 30, 2024, 2:11 PM IST

தேனியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பதைத் தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலரின் கணவரை கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து உள்ள போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரமேஷ் மற்றும் பாண்டிச்செல்வம் புகைப்படம்
ரமேஷ் மற்றும் பாண்டிச்செல்வம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தேனி: தேனி மாவட்டம் தேவாரத்தில் திமுக பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் லட்சுமி. இவரது கணவர் பால்பாண்டி அதே பகுதியில் டாஸ்மாக் மதுபான பார் - ஒன்றை நடத்தி வருகிறார். இதே போல் ஏழாவது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் கவிதா. இவரது கணவர் ரமேஷ் (40), திமுக பேரூர் இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று இரவு பால்பாண்டி நடத்தி வரும் டாஸ்மாக்கிற்கு, ரமேஷ் மது அருந்துவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அனைவரிடமும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கொடுக்க மறுத்த ரமேஷ்,

"தான் திமுக கவுன்சிலரின் கணவராகவும், பேரூர் இளைஞரணி செயலாளராகவும் இருக்கும் நிலையில் தன்னிடமே பத்து ரூபாய் கூடுதலாக கேட்கிறீர்களே" என கூறி பால்பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற பால்பாண்டியின் மகன் பாண்டிசெல்வம் (20), மது மற்றும் கஞ்சா போதையில் கத்தியால் ரமேஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ரமேஷ் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

தொடர்ந்து பாண்டிசெல்வம் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷுக்கு நேற்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தில் பேரூராட்சி மன்ற தலைவரின் கணவர் பால்பாண்டியை போலீசார் கைது செய்த போலீசார், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கனகராஜ், பால்பாண்டி, லட்சுமி, பாண்டிசெல்வம் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய பாண்டியனை தேவாரம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருச்சியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்..வகுப்பறையில் நடந்த கொடூர சம்பவம்!

Last Updated : Jul 30, 2024, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.