ETV Bharat / state

தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்.. சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை..! - improper relationship - IMPROPER RELATIONSHIP

Improper Relationship: மீஞ்சூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்ததை தட்டி கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோப்புப்படம், கொலை செய்யப்பட்டவர் புகைப்படம்
கோப்புப்படம், கொலை செய்யப்பட்டவர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 7:51 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (26). பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணுவும், லட்சுமணனும், புழல் சிறையிலிருந்த போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகி உள்ளனர். விஷ்ணுவுக்கு, லட்சுமணனின் மனைவியுடன் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லட்சுமணனுக்கு தெரிய வந்ததால் விஷ்ணுவிடம் இதனை தட்டி கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு, லட்சுமணனை மது குடிக்க தோட்டக்காடு பகுதிக்கு அழைத்துச் சென்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் போலீசார் தனிப்படைகள் அமைத்து 5 பேரை தேடி வருகின்றனர். மேலும், லட்சுமணனின் மனைவி ரம்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததை தட்டி கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவிரியில் குளித்த கொடைக்கானல் இளைஞர்கள்! அள்ளிச்சென்ற அலையால் சடலமாக மீட்பு - Karur Kaveri River wave hit death

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.