ETV Bharat / state

ஓடும் ரயிலில் ஆபாச சீண்டல்.. சென்னை பெண் மென்பொறியாளர் புகாரில் ஒருவர் கைது! - IT woman harassed in train - IT WOMAN HARASSED IN TRAIN

Woman it employee harassed in running train: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பதியப்பட்ட வழக்கில் ஒருவரை சென்னை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான நபர்
கைதான நபர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 5:48 PM IST

சென்னை: கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில், கரூரைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் ஒருவர் பயணித்தார்.

அப்போது அந்த விரைவு ரயில் அதிகாலை 2 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்தை நெருங்கிய போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. பாதிக்கபட்ட இளம்பெண்ணிடம் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் போலீசார் முன்னிலையில் விசாரணை நடந்தது.

இதையடுத்து, அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பெறப்பட்ட தகவலை அடுத்து அமைக்கப்பட்ட நான்கு தனிப்படை போலீசார், கிடைக்கப்பட்ட புகைப்படத்தை ரகசியமாக கொண்டு தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், ரயில்வே போலீசார் வெளியிட்ட புகைப்படம், தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண் ஊடகத்தில் வாயிலாக செய்தியில் வந்ததை அடுத்து, ரயில்வே காவல் துறையினருக்கு பல தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, பழைய மகாபலிபுரம் சாலையில் தங்கியிருந்த நபரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அந்த நபர் ஈரோட்டில் இருந்து சென்னை வருவதற்காக காத்திருந்த போது ரயிலை தவற விட்டதாகவும், அடுத்து வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய போது, அதிகாலையில் அப்பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து ரயில்வே காவல் நிலையம் அழைத்து வரபட்ட நபரிடம், மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் இன்ஜினியரிடம் பாலியல் அத்துமீறல்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.