ETV Bharat / state

தூத்துக்குடி பனிமயமாதா கோயில் திருவிழாவிற்குச் செல்லும் வழியில் நேர்ந்த சோகம்.. ஒருவர் உயிரிழப்பு! - car accident at thoothukudi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 3:34 PM IST

Car Accident At Thoothukudi: தூத்துக்குடி பக்கிள் ஓடைக்குள் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் கவிழ்ந்து விபத்து
கார் கவிழ்ந்து விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றிரவு (ஆக.2) தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களான அண்ணா நகரைச் சேர்ந்த சதீஷ், புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக், முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜ் மற்றும் அருண், அபினேஷ் ஆகியோருடன் தூத்துக்குடி பனிமய மாதா கோயில் திருவிழாவிற்குச் செல்வதற்காக அண்ணா நகர் பண்டுகரை சாலை வழியாக காரில் சென்றுள்ளனர்.

அப்போது காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் நிலைதடுமாறி தடுப்பு வேலிகளை உடைத்தபடி சுமார் 20 அடி பள்ளமான பக்கிள் ஓடையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்தவர்கள் அலறியபடி கூச்சலிட்டனர். அந்த சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடையில் விழுந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி வேல்ராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த நான்கு பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: தாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! - chennai traffic jam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.