ETV Bharat / state

தங்கைகளை ஏமாற்றி சொத்தை பத்திரப்பதிவு செய்த அக்கா? - வாணியம்பாடியில் தொடரும் சம்பவங்கள் - Fake deed in sub registrar office - FAKE DEED IN SUB REGISTRAR OFFICE

Fake deed registration at tirupattur: தங்கள் மூத்த சகோதரி, போலியான ஆவணங்களை வைத்து சொத்தை பத்திரப்பதிவு செய்துள்ளதாகக் கூறி, அவரது தங்கைகள் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட சகோதரிகள்
போராட்டத்தில் ஈடுபட்ட சகோதரிகள் (PHOTO CREDITS - ETV BHARAT TAMIL NADU)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 8:35 PM IST

திருப்பத்தூர்: தங்கைகளின் கையெழுத்து இல்லாமல், போலியான ஆவணங்கள் வைத்து பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறி இன்று (மே.27) வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கைகள் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் பேட்டி (VIDEO CREDITS - ETV BHARAT TAMIL NADU)

வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் அப்பு, இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு கிரிஜா, கலைவாணி, ஆனந்தி, லட்சுமி, தமிழரசி, சத்யா என்ற 6 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் 900 சதுர அடியில் பட்டா இடம் உள்ளது. அப்பு மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தனர்.

இந்நிலையில் அப்பு, கஸ்தூரி தம்பதியின் மூத்த பெண்ணான கிரிஜா (42), 900 சதுர அடி இடத்தை தனது தங்கைகளுக்கு தெரியாமல் போலியாக பத்திரப்பதிவு செய்ய முயன்றுள்ளார். இதனை அறிந்த கிரிஜாவின் தங்கைகள் 5 பேர், தங்களது கையெழுத்து இல்லாமல் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2023 ஆக.30 ம் தேதியன்று தடை மனு அளித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து தனது தங்கைகளின் பெயரில் போலியான ஆவணங்கள் சமர்பித்து, 2024 ஏப்.25 ம் தேதியன்று கிரிஜா, 900 சதுர அடி இடத்தை வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த கிரிஜாவின் சகோதரிகள் கலைவாணி, ஆனந்தி, சத்யா ஆகியோர் தங்களது கையெழுத்து இல்லாமல் போலியான ஆவணங்களை சமர்பித்து பத்திரப்பதிவு செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி, வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் வாணியம்பாடி துணை சார்பாதிவாளர் முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததன் பேரில் சகோதரிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தம்பியின் சொத்தை அண்ணன் போலியான ஆவணங்கள் வைத்து பத்திரப்பதிவு செய்திருந்த நிலையில், மீண்டும் தற்போது அக்கா, தங்கைகளை ஏமாற்றி போலியான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "நான் தாசில்தார், நீ பில் கலெக்டர்" அரசு வேலைக்கு பேரம் பேசியவர் கைது - MONEY CHEATING

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.