சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினந்தோறும் ஏராளமான மக்கள் கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பகுதிகளுக்கும், வட மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். இதனால், சென்னை சென்ட்ரல் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். மக்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால், காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முதல் தளத்தில், ஓய்வு அறைக்கு எதிரே சுமார் 26 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, அமர்ந்த நிலையில் சடலமாக கிடந்த பெண்ணின் உடலை, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு சிஙகப்பூரில் 20 ஆண்டு சிறைத் தண்டனை.. என்ன நடந்தது? - Indian Man Jailed In Singapore