ETV Bharat / state

நேற்று அக்காவுக்கு திருமணம்; இன்று தங்கை மரணம்.. வரதட்சணை கொடுமை காரணமா? - Girl committed suicide - GIRL COMMITTED SUICIDE

Mayiladuthurai young girl suicide: நேற்று அக்காவிற்கு திருமணம் நடந்த நிலையில், சீர்வரிசை தொடர்பாக வரதட்சணை பிரச்சனையில் திருமணமான மூன்று மாதத்தில் தங்கை மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் புகைப்படம்
உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 11:04 PM IST

உயிரிழந்த பெண்ணின் தாய் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: திருமணமான மூன்று மாதத்தில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பெண்ணின் மாமியாரை கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் இன்று (மே 20) போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யராஜ் - ஆரோக்கிய செல்வி தம்பதியினர். இவர்களது இளைய மகள் ஜெனிபர் (23). இவரும் இவர்களது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா செங்குடி கிராமத்தைச் சேர்ந்த சௌரிராஜ் - இருதய மேரி தம்பதியினரின் மகனாக மார்ட்டினும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

மூத்த மகள் இருக்கும் போது இளைய மகளுக்கு திருமணம் செய்ய ஜெனிபர் குடும்பத்தினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மார்ட்டின் குடும்பத்தினர் வரதட்சணை எதுவும் வேண்டாம், பெண்ணை மட்டும் தந்தால் போதும் எனக் கூறி அவர்களை சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து கடந்த பிப்.09 ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து பத்து நாட்களுக்குப் பின் மார்ட்டின் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று ஜெனிபரின் அக்காவிற்கு பருத்தியூர் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொள்ள ஜெனிபர், அவரது மாமியார் இருதய மேரி, நாத்தனார் வென்சியா மேரி ஆகியோர் சென்றுள்ளனர். திருமணம் முடிந்த பின் நேற்று இரவு வீடு திரும்பிய ஜெனிபர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரது தாய் கூறுகையில், "ஜெனிபரின் அக்காவிற்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்களை கண்ட ஜெனிபரின் மாமியார் அதனை அவர்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டு மண்டபத்திலேயே ஜெனிபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

நேற்று இரவு ஜெனிபர் தொலைபேசியில் அழைத்து, அக்காவிற்கு மட்டும் இவ்வளவு சீர்வரிசை பொருட்களை உன் குடும்பத்தார் செய்துள்ளனர், உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை எதுவும் செய்யவில்லை எனக் கூறி கடுமையாக தாக்கியதாக கூறினார். இதனை பேசிக்கொண்டிருக்கும் போதே தொலைப்பேசி அழைப்பு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் பதற்றத்தில் எங்கள் மகனை அனுப்பி ஜெனிபரை அழைத்து வரச் சொன்னோம். என் மகன் ஜெனிபர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு ஜெனிபர் பேச்சு மூச்சு இன்றி மயங்கி கிடந்துள்ளார். என் மகன் உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்" என தெரிவித்தார்.

இந்த சம்வம் குறித்து ஜெனிபர் குடும்பத்தினர் பெரம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை முன் குவிந்த குடும்பத்தினர் ஜெனிபரின் மாமியார் இருதயமேரியை கைது செய்ய வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி மற்றும் போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் திருமணமாகி மூன்று மாதங்களில், மணப்பெண் உயிரிழந்ததால் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சணா மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறவினர்களிடம் உறுதியளித்தார். அக்கா திருமணம் முடிந்த மறுநாளே, தங்கை உயிரிழந்ததை அறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுத சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: திருப்பத்தூர்: அரசு மருத்துவமனை கட்டுமான பணியின் போது மேற்கு வங்க இளைஞர் மரணம்! - Accident In Construction

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.