ETV Bharat / state

நிலத்தை மீட்டுத் தரக்கோரி தந்தையுடன் பெண் தர்ணா.. தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! - land issue - LAND ISSUE

Theni Collector Office: ஆக்கிரமிப்பு செய்தவரிடம் இருந்து நிலத்தை மீட்டு தரக்கோரி, பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெண்ணின் தந்தை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்
பெண்ணின் தந்தை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 9:41 PM IST

தேனி: தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயசாரதி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகன் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். விஜயசாரதி கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை விபத்தில் சிக்கி முதுகுத்தண்டு பாதிப்பு ஏற்பட்டு கால்கள் செயலிழந்து நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் மருத்துவச் செலவுகளுக்காகவும், குடும்பச் செலவுகளுக்காகவும், சொத்தை விற்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ராம் சுந்தர் என்ற நபர் நிலத்திற்கு போலி பத்திரம் தயார் செய்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நிலத்தை மீட்டுத் தருமாறு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தந்தையை அழைத்து வந்து ஆட்சியர் காரின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கடந்த 3 வருடங்களாக என்னுடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவரிடம் இருந்து மீட்டுத் தருமாறு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால், இதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர, வேறு வழி இல்லை" என தெரிவித்தார். பின்னர், ஆண்டிப்பட்டி தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : நடிகைகளின் பாலியல் பிரச்னைக்கு யார் பொறுப்பு? - பிரபல நடிகை கைக்காட்டுவது இவர்களைதான்! - radhika about hema committee

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.