சென்னை: நுங்கம்பாக்கம் நூர்வீராசாமி தெருவில் நகைக் கடை உடன் நகை அடகு கடை வைத்திருப்பவர் விஷால். இவரின் கடையில் நேற்று முந்தினம் மூன்று சவரன் தங்க நகை திருடப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் மாம்பலத்தை சேர்ந்த சுபத்ரா கல்யாணி என்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து நகை கடைகாரரின் புகார்: நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க பெண், 15 வயது சிறுவனுடன் தனது நகை கடைக்கு வந்து நடை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் மூன்று சவரன் தங்க நகையை திருடியதாக காவல் துறைக்கு நகை கடைகாரர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
விசாரணை: நுங்கம்பாக்கம் காவல் துறையினரின் விசாரணையில் புகாருக்கு ஆளான சுபத்ரா கல்யாணி தான் திருடியதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த நகையை தியாகராய நகரில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், அதில் ரூ.37 ஏழாயிரத்தை வைத்து சில்லறை கடன்களை அடைத்து விட்டு, மீதிம் இருந்த 83 ஆயிரம் ரூபாயை மகனின் படிப்பு செலவுக்கு உதவும் என வங்கிக் கணக்கில் வைத்துள்ளதாகவும் சுபத்ரா கல்யாணி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கடந்த மாதம் தியாகராய நகரில் ஒரு நகை கடையில் கைவரிசை காட்டியுள்ளதும், பின் ஒரு வாரம் கழித்து அதே கடைக்கு சென்றபோது கடை பணியாளர்கள் அவரை பிடித்து விட்டதாகவும், அவர்களிடம் காவல்துறையினரிடம் புகார் செய்ய வேண்டாம் என கெஞ்சி உரிய தொகையை தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி பணத்தை செட்டில் செய்துள்ளதும் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பளமானது.
திருட்டின் பின்னனி: கைது செய்யப்பட்ட சுபத்ரா கல்யாணியிடம் நடத்திய விசாரணையில் அவர், தன் மகன் சிபிஎஸ்இ பாடப்பிரிவில் பத்தாம் வகுப்பில் 93 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதால், தனது மகனின் மேல்படிப்பு செலவுக்காக கைவரிசை காட்டியதாக தெரிவித்துள்ளார்.
முதல் கணவரை விட்டு பிரிந்த நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் ஆனால் அவர் அவரது பெற்றோரை பார்த்துக் கொள்ளும் வேலைக்காரி போலவே நடத்தி வந்துவதாகவும். மாதம் குடும்பச் செலவுக்காக 5000 ரூபாய் மட்டுமே கொடுப்பதாகவும் சுபத்ரா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மேலும் பட்டதாரியான சுபத்ரா கல்யாணி வீட்டில் இருந்தபடியே தனியார் மென்பொருள் நிறுவனத்தில்( work from home) பணியாற்றி வந்த நிலையில் அந்த நிறுவனமும் முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தன் முதல் கணவர் மூலம் பிறந்த மகன் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் பொருளாதார சிக்கலால், அவனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற கவலையில் சுபத்ரா கல்யாணி, நன்கு யோசனை செய்த பிறகே அவர் இந்த நூதன திருட்டு தொழில் இறங்கியுள்ளார் என போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:மனைவிக்கு பதில் மாமனாரைக் கொன்ற மருமகன் கைது.. தஞ்சையில் பரபரப்பு!