சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால்வாய் பணி பருவமழைக்கு முன்பாக நிறைவு பெற வேண்டும் என தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மழைநீர் வடிகால்வாய் பணி நடைப்பெறும் இடங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வடசென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதிக்கு உட்பட்ட 1வது தெருவில் வசித்து வருபவர் பூங்காவனம் என்பவர் வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி 6வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களோடு வீட்டை அகற்ற வந்தனர். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சூழலில் பூங்காவனத்தின் உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். இதற்கிடையே அதிகாரிகள் வீட்டை அகற்ற முற்பட்டனர். அப்போது அந்த வீட்டை சார்ந்தவர்கள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் பெண் ஒருவர் ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பாய்ந்து தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின் அந்த பெண் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம் என்றும் திடிரென காலி செய்ய கூறுவது ஏற்க முடியாதது என தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் தர கோரி கேட்டதன் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் தற்காலிகமாக வீட்டை அகற்றும் பணியில் இருந்து சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.10 கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை; விற்பனையாளர்கள் மீது டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!