ETV Bharat / state

கணவனை பிரிந்து பலருடன் தொடர்பில் இருந்த பெண் கட்டையால் அடித்து கொலை; நெல்லை மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்! - NELLAI WOMEN MURDER

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பெண் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 8:53 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (30), இவருக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தனது கணவருடன் விவாகரத்து பெற்றுள்ளார்.

தொடர்ந்து வேறு நபருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவரையும் பிரிந்து தற்போது முருகன் என்ற நபருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் முருகனையும் பிரிந்து அயன் சிங்கம்பட்டி பகுதியில் முத்துலட்சுமி வாழ்ந்து வந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முத்துலெட்சுமியின் தலையில் மர்ம நபர் கட்டையால் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: தட்டி கேட்டவரின் மூக்கை கடித்து துப்பிய நபர்.. பல்லும் பறிபோனது.. வேலூரில் பகீர் சம்பவம்!

இதில் பலத்த சத்தம் கேட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் முத்துலெட்சுமி வீட்டில் வந்து பார்த்த நிலையில் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சதீஷ் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் உடலை கைப்பற்றி பல்வேறு கோணத்தில் கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். கணவரை பிரிந்து பல ஆண்களுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படும் பெண் மர்ம நபரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.