நீலகிரி: கூடலூர் பகுதி, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், காட்டு விலங்குகள் அடிக்கடி நகரப் பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள தேவாலா தேவகிரி எஸ்டேட் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர், ஹனீபா (59). இவர் அருகிலுள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது, காட்டு யானை ஒன்று அப்பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த ஹனீபாவை தாக்கியுள்ளது.
இதில் ஹனீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விறகு சேகரிக்கச் சென்ற ஹனீபா வெகு நேரம் ஆகியும் கடைக்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், வனப்பகுதிக்குச் சென்று தேடிப் பார்த்து உள்ளனர். அப்போது, தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஹனீபா சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், காவல்துறையினர், மற்றும் வனத்துறையினர் ஹனீபாவின் சடலத்தை மீட்டு, பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மேலும், யானை தாக்குதல் குறித்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குன்னூரில் 5வது நாளாக எரியும் காட்டுத்தீ.. ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!