ETV Bharat / state

என்னைய விட்டுட்டு பைக்ல ஊர் சுத்துறியா?.. பிரிந்து சென்ற கணவனின் பைக்கை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி! - Wife stole husband bike - WIFE STOLE HUSBAND BIKE

Wife stole husband bike: வத்தலக்குண்டு அருகே தன்னை பிரிந்து சென்ற கணவனை பழிவாங்க கணவன் பயன்படுத்திய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை, உறவினர் மூலம் மனைவி திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பைக், கைதானவர்கள்
பைக், கைதானவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 10:25 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியை சேர்ந்த எழில்மாறன் சித்தரேவு ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார். எழில் மாறன் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

பைக்கை திருடும் சிசிடிவி காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனை அடுத்து எழில் மாறன் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளை கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் எழில் மாறனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆள் வைத்து கணவனின் மோட்டார் சைக்கிளை திருட வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

தன்னைப் பிரிந்து சென்ற கணவன், விலை உயர்ந்த புது மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்துக் கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி, தனது உறவினர்கள் உதவியுடன் கணவனின் மோட்டார் சைக்கிளை திருடுவதற்கு திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எழில் மாறனின் மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய போலீசார், இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய பால யோகி, பிரகாஷ், காயத்ரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான எழில் மாறனின் மனைவி ஜெயலட்சுமியையும் தேடி வருகின்றனர். இதனிடையே மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் நபரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திண்டுக்கல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் புதுச்சேரி தனியார் விடுதியில் தற்கொலை! - Puducherry family suicide case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.