ETV Bharat / state

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை ஏமாற்றியவர் மீது மனைவி புகார்! - man cheated 5 women - MAN CHEATED 5 WOMEN

திரைப்பட இயக்குனர் எனக் கூறி 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பூர்ணிமா புகைப்படம்
புகார் அளித்த பூர்ணிமா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 9:25 PM IST

திருவண்ணாமலை: வேங்கிக்காலை சேர்ந்தவர் பூர்ணிமா (41). இவர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 18 ஆம் தேதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பூர்ணிமா (Video Credits - ETV Bharat Tamilnadu)

அந்த மனுவில், "ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்ற என்னை, குடியாத்தம் பகுதியை சேர்ந்த லட்சுமி காந்தன் என்பவர் திருமணம் செய்ய பெண் கேட்டதால் பெரியவர்கள் முன்னிலையில் கலசபாக்கத்தில் கடந்த 2016 ஆம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர், சினிமா டைரக்டர் என்றும், ஏற்கனவே சினிமா படம் தயாரித்துள்ளதாககூறி என்னை சென்னைக்கு அழைத்துச் சென்றார்.

சென்னையில் இருந்தபோது என் கணவர் அடிக்கடி பல பெண்களிடம் போனில் பேசுவார். இரவு நேரத்தில் யார் போன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் என்னை அடித்து திட்டுவார். 5 வருடம் சென்னையில் இருந்த பிறகு திருவண்ணாமலையில் வீடு வாங்கலாம் என்று கூறி என்னை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து என்னை பெற்றோரின் வீட்டில் விட்டுவிட்டு அடிக்கடி வந்து பார்த்து செல்வார்.

தற்போது என் கணவர் வேறுவொரு பெண்ணிடம் பேசுவதாக கேள்விப்பட்டு விசாரித்தபோது வேறொரு பெண்ணுடன் என் கணவன் குடும்பம் நடத்துவதாக தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு தகாத வார்த்தையால் பேசி என்னை தாக்கினார். மேலும், என்னை ஏமாற்றியது போல் இதுவரை ஐந்து பெண்களை திரைப்பட இயக்குநர் என்று கூறி திருமணம் செய்துள்ளது எனக்கு தெரிந்தது. இதையடுத்து என் கணவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமது புகார் மனுவில் பூர்ணிமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் திருவண்ணாமலை நகர துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், புகார் அளித்த பூர்ணிமா மற்றும் அவரது கணவர் லட்சுமி காந்தன் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: அரசு காப்பீடு வாங்கித் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் செயின் பறிப்பு - சென்னையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.