ETV Bharat / state

கணவருக்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு என மனைவி வழக்கு.. சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - மனு தாக்கல்

High Court Madurai Bench: கணவருக்கு 500க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக பெண் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

wife case against husband
கணவர் மீது மனைவி வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 12:27 PM IST

மதுரை: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்த்தி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "எனக்கும் விவேக்ராஜ் என்பவருக்கும் திருமணம் ஆகி, நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம். இந்நிலையில், எனது கணவரின் தொலைபேசியை எடுத்து பார்த்த போது, அதில் பல பெண்களின் ஆபாச வீடியோ கால் ஸ்கிரீன் சாட் மற்றும் அந்தரங்க உறுப்புகளின் படங்களை அவர் வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் அவர் வங்கியில் வேலை பார்ப்பதால், அங்கு வரும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியரிடம் பேசிப் பழகி, சுமார் 500 முதல் 1000 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சேகரித்து வைத்துள்ளார். இதைப் பற்றி எனது கணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் கூறிய போது, அவர்கள் இதைப் பற்றி வெளியே யாரிடமும் கூறக்கூடாது என என்னை மிரட்டினர்.

மேலும், நான் இரண்டு மாத கர்ப்பிணி பெண் என்று கூட பாராமல், என்னை அடித்து துன்புறுத்தியதால் என் கரு சிசுவிலேயே கலைந்து விட்டது. இது தொடர்பாக தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே எனது கணவர் மீது அளிக்கப்பட்ட புகார் மீது தஞ்சை மகளிர் போலீசார் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான வழக்கு நேற்று(செவ்வாய்க்கிழமை) நீதிபதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிபிசிஐடி தரப்பு காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு, நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: பணிப்பெண் துன்புறுத்தல் விவகாரம்: எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.