ETV Bharat / state

"கணவரின் தற்கொலை முயற்சிக்கு திமுக கவுன்சிலர் தான் காரணம்" - திண்டுக்கல் பெண்ணின் குற்றச்சாட்டின் பின்னணி என்ன? - man attempt suicide

திண்டுக்கல்லில் திமுக கவுன்சிலர் தங்களது பணத்தை ஏமாற்றியதால் தான் தனது கணவர் தற்கொலை முயற்சித்துள்ளதாக அவரது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மனைவி பகீர் குற்றச்சாட்டு
கணவர் தற்கொலைக்கு முயன்றதற்கு திமுக பிரமுகர் தான் காரணம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 2:34 PM IST

பாதிக்கப்பட்ட பெண்ணின் செய்தியாளர்கள் சந்திப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 24வது வார்டு ஜான் பிள்ளை சந்துப் பகுதியைச் சேர்ந்தவர் கோபால கண்ணன் (38), இவரது மனைவி அமலா தேவி. இவர் தங்க நகைகளுக்கு பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் திண்டுக்கல் திமுக மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், செந்தில்குமார் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் தான் தனது கணவர் தற்கொலைக்கு முயன்றதாக கோபால கண்ணனின் மனைவி அமலா தேவி குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக தனது கணவர் கோபால கண்ணன், செந்தில்குமாரிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதற்கு மாதமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ரூ.1.5 லட்சம் அசல் பணத்தை கொடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக வட்டி பணம் செலுத்தாமல் இருந்ததால், செந்தில்குமார் எனது கணவர் கோபால கண்ணிடம் இதுவரை வட்டியோடு சேர்த்து ரூ.5 லட்சம் நிலுவையில் உள்ளது என்று கூறினார். இதனால், எனது கணவன், தங்களது வீட்டை விற்று கடனை அடைத்து விடுவதாக கூறியுள்ளார். அதற்கு செந்தில்குமார், எங்களது வீட்டை தானே வாங்கிக் கொள்வதாக கூறி ரூ.15 லட்சத்தை எனது கணவரிடம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று(வியாழக்கிழமை) பத்திரப் பதிவு இருந்த நிலையில், மீதமுள்ள தொகையை தன்னிடம் கொடுக்குமாறு தனது கணவர் கேட்டுள்ளார். அதற்கு செந்தில்குமார், நீங்கள் பெற்ற கடனுக்கான அசலுக்கும், வட்டிக்கும் மீதமுள்ள பணம் சரியாகிவிட்டது அதனால் கையெழுத்து போடுங்கள் எனக் கூறினார். இதனால் அவர் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றார் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமலா தேவி, "தற்போது சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவரின் இந்த நிலைமைக்கு காரணமான திமுக கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தற்கொலை  தடுப்பு எண்
தற்கொலை தடுப்பு எண்

இதில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திமுக கவுன்சிலர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்க ஈடிவி பாரத் முயன்ற போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதனை வெளியிட ஈடிவி பாரத் தயாராக உள்ளது.

இதையும் படிங்க: நடிகர் அஜித்துக்கு மூளையில் சிறிய கட்டி? - அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.