ETV Bharat / state

சோஷியல் மீடியாவில் முற்றும் மோதல்.. திருச்சி சூர்யா நீக்கப்பட்டதன் பின்னணியின் பாஜக முக்கியப்புள்ளி? - Trichy Surya - TRICHY SURYA

Trichy Surya: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால் தமிழ்நாடு பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி எஸ் சூர்யா சிவா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு பின்னணியில் பாஜகவின் முக்கிய தலைவர் உள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அண்ணாமலை, திருச்சி சூர்யா
அண்ணாமலை, திருச்சி சூர்யா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 3:57 PM IST

சென்னை: திமுக மூத்த தலைவரும், எம்.பியுமாக உள்ள திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா யாரும் எதிர்பார்க்காத வகையில் 2022ஆம் ஆண்டு மே மாதம் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பாஜகவில் இணைந்தது முதல் அண்ணாமலைக்கு ஆதரவாகவும், திமுகவிற்கு எதிராகவும் சர்சைக்குரிய வகையில் திருச்சி சூர்யா பேசி வந்தார்.

கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே திருச்சி எஸ்.சூர்யாவுக்கு பாஜகவில் ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளர் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதால் இரண்டாவது முறையாக கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக பாஜக ஓபிசி அணியின் மாநில தலைவர் பி.எம்.சாய்சுரேஷ் குமரேசன் அறிவித்திருந்தார். சூர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. 4 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு இருந்த பாஜக, அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தனியார் வலைத்தளத்திற்கு அளித்த பேட்டியில் தொடங்கியது சர்ச்சை...

அந்த பேட்டியில், கட்சியில் கொடுக்கப்பட்ட பணம் சரிவர போய் சேராததால் தேர்தல் பணி செய்வதில் தொய்வு ஏற்பட்டது எனவும், கட்சியில் சமூகவிரோதிகளுக்கு பதவி வழங்கப்பட்டு இருப்பதினால் கடுமையாக உழைத்த பல தொண்டர்களுக்கு பதவி கிடைக்காமல் போனது எனக்கு வருத்தம் என தெரிவித்திருந்தார். இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சாடுவது போன்று இருந்ததால், அதற்கு பதில் அளித்து பேசும் விதத்தில் தன்னுடைய எக்ஸ் தளத்தில் திருச்சி சூர்யா, தமிழிசை சௌந்தரராஜனை டேக் (Tag) செய்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

அந்த பதிவுதான் திருச்சி சூர்யாவின் பதவிக்கு வேட்டு வைக்கும் விதமாக அமைந்தது. அதில் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, “குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் அதிகமாக சேர்ந்தது. நீங்கள் தலைவருக்கு பரிந்துரை செய்த எல்.முருகன் தலைவராக இருக்கும்பொழுது தான், யாரெல்லாம் கட்சியில் சேர்க்கப்பட்டனர் என்ற பட்டியலை நான் கொடுக்கிறேன்” என தெரிவித்திருந்தார். இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்க தொடங்கியது. அதில் தற்போதைய தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒரு குழுவும், முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஒரு குழுவும் சமூக வலைத்தளப் பக்கங்களில் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டனர். இது ஒருபுறம் இருக்க, திடீரென தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில மைய குழு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிவித்திருந்தாலும், அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் இரு அணிகளுக்கிடையேயான பனிப்போர் பற்றி தான் முக்கிய விவாதம் நடைபெற்றது. மையக்குழு கூட்டத்தின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், தலைமையை விமர்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

மைய குழு கூட்டம் முடிந்த பிறகு ஓபிசி அணியின் பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, சிந்தனையாளர் பிரிவின் மாநிலச் செயலாளர் கல்யாண ராமன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக இரு பிரிவின் பிரிவின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு ஆதரவாக பேசி வந்த திருச்சி சூர்யா தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டு அண்ணாமலைக்கும், பாஜகவுக்கும் எதிராக பேசத் தொடங்கி எக்ஸ் வலைத்தளத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தினமும் பதிவிட்டு வருகிறார்.

“உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என கெஞ்சவில்லை. நீங்கள் என்னை என்ன வேண்டாம் என சொல்லுவது நான் கூறுகிறேன். எனக்கு பாஜக வேண்டவே வேண்டாம்” என தொடர்ந்து எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.

“என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியத்தையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதிவீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை? பயமா?” என நேரடியாகவே அண்ணாமலையை டேக் செய்து பதிவிட்டு வம்பிழுக்கும் வேலையைத் தொடங்கினார்.

தொடர்ந்து பாஜகவிற்கும், தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக வருகிறார். “அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே. எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என சினிமா பட பாணியில் காட்டமாக பதிவிட்டு வருகிறார்.

“திமுகவின் முதல் குடும்பத்தை குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு, மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி ரூபாய் வரை ஆட்டைய போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே.. Count Down Starts..” என திமுகவிற்கு ஆதரவாக பதிவிட்டு, நேரடியாக பாஜவை தாக்க ஆரம்பித்துவிட்டார். “என்மீதும், கல்யாணராமன் மீதும் நடவடிக்கை எடுத்தவர்கள் ஏன் இன்னும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என மறைமுகமாக தமிழிசை சௌந்தரராஜனை தாக்கி இருந்தார்.

கள்ளச்சாராய மரணத்தைப் பொறுத்தவரை மோடி ஆட்சி செய்த காலத்தில் 2009ல் கள்ளச்சாராய சாவு மட்டும் 139, அதன் பிறகு குஜராத்தில் 2016-ல் 16 பேர், 2019ல் 20 பேர், 2022ல் 42 பேர் என கள்ளச்சாராயத்தால் குஜராத்தில் மட்டும் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தச் செய்திகளை வைத்து, நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் இது போன்ற மரணங்கள் நடந்திருக்கின்றன. இணைந்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அண்ணாமலை பேசவில்லை. தமிழ்நாட்டில் ஏதாவது அரசியல் லாபம் பார்க்க முடியுமா என்பதை தவிர, அண்ணாமலைக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை” என பதிவிட்டு பாஜகவை எதிர்பதில் திமுக மற்றும் அதிமுககாரர்களுக்கு நான் சளைத்தவன் இல்லை என்பதை காட்டி வருகிறார்.

அதிலும், நேற்று முக்கிய பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், “ஒரு சமுகத்தைச் சார்ந்தவர்களை அதிகமாக பதவியில் நீக்கி, முக்குலத்தோர் சமூகத்திற்கு பாஜக எதிராக செயல்படுகிறது” என பகிரங்கமாக பதிவிட்டார். அதில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட, மண்டல், ஒன்றியத்தில் உள்ளடக்கிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பாஜகவால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைத்து மாபெரும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்” என சமுதாயம் சார்ந்து பதிவிட்டிருந்தார். இனி தனித்து செயல்படப் போகிறாரா அல்லது திராவிட கட்சியிகளில் இணைய போகிறாரா இல்லை... மீண்டும் பாஜகவிலேயே இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 50% காலாவதியானவை! போக்குவரத்துக் கழகம் அதிர்ச்சி தகவல்! - TN assembly sessions 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.