ETV Bharat / state

ஆடி அமாவாசை Vs மற்ற அமாவாசை.. சிறப்புகளும் ஆன்மீகமும் என்ன? - Aadi Amavasai 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 8:14 PM IST

Updated : Aug 4, 2024, 6:46 AM IST

Aadi Amavasai: ஆடி அமாவாசையின் சிறப்புகள் என்ன? இந்த ஆடி அமாவாசையில் திதி கொடுப்பதற்கு நல்ல நேரம் எது? ஆடி அமாவாசை மற்றும் மற்ற அமாவாசைகளுக்கு இடையிலான வேறுபாடு என்ன என்பது குறித்து பிரபல ஜோதிடர் சங்கர சுப்பிரமணி கூறுவதை காணலாம். குப்பில் காணலாம்.

அமாவாசை நிலா மற்றும் ஜோதிடர் சங்கர சுப்பிரமணி
அமாவாசை நிலா மற்றும் ஜோதிடர் சங்கர சுப்பிரமணி (Photo Credits - ISRO and ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: நம் நாட்டில் இந்துக்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மாதந்தோறும் அமாவாசை தினத்தில் பெரும்பாலோனார் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசை பிரசித்தி பெற்ற வழிபாடாக தமிழக மக்கள் மத்தியில் விளங்கி வருகிறது.

மாதந்தோறும் வழிபாடு மேற்கொள்ள முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் வழிபாடு மேற்கொண்டால் ஆறு மாதம் தங்கள் முன்னோர்களை வழிபட்டதற்கு சமம் என்பது ஐதீகம். எனவே, ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள். குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி அமாவாசை வெறும் முன்னோர்கள் வழிபாடாக மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் ஒரு திருவிழாவாக பார்க்கப்படுகிறது.

ஐயப்பனின் ஆறாவது படை வீடு: அந்த வகையில், திருநெல்வேலி பாபநாசம் அருகே தாமிரபரணி ஆற்றுக்கு நடுவே அமைந்திருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆடி அமாவாசை தினங்களில் இக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வாழிபாடு செய்வார்கள்.

சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை இந்த ஆண்டு வரும் 4ஆம் தேதி வருகிறது. இந்நிலையில், ஆடி அமாவாசையின் சிறப்புகள் என்ன என்பது குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த ஜோதிடர் சங்கர சுப்பிரமணி என்பவர் ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால், ஆறு மாதமும் கொடுத்த பலன் ஏற்படும். ஆடி அமாவாசையில் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரக் கோட்டில் இருக்கும்.

27 தலைமுறை பந்தம்: சர்வ பித்ரு அமாவாசை, போதாயன அமாவாசை என மொத்தம் இரண்டு அமாவாசை உள்ளது. போதாயன அமாவாசை சில மாதங்களில் மட்டுமே வரும். இந்த ஆண்டு குரோதி வருடம் ஆடி அமாவாசை வரும் 4ஆம் தேதி, ஆடி மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இந்த முறை பூசம் நட்சத்திரமும், சகுனி கர்ணமும் சேர்ந்து வருகிறது. இந்த அமாவாசையில் செய்யக்கூடிய திதி முழுமையான பலனை கொடுக்கும். நமது உடம்பில் ஓடும் 27 வகையான ஜீன்களும் 27 தலைமுறையிலான மூதாதையர்களைக் குறிக்கும்.

நீர்நிலைகளில் திதி கொடுப்பதற்கான காரணம்: முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவும், அவர்களை திருப்திபடுத்தும் விதமாகவும் அமாவாசை வழிபாடு மேற்கொள்வர். தென்னிந்தியாவில் முதலில் மூதாதையர் வழிபாடு தான் தோன்றியது. நீருக்கு ஒளியைக் கடத்தும் சக்தி இருப்பதால் தான் நீர்நிலைகளில் பொதுவாக திதி கொடுக்கிறார்கள். நீர்நிலைகளில் வைத்து முன்னோர்களுக்கு செய்யக்கூடிய வழிபாடு கண்டிப்பாக அவர்களுக்குச் சென்று சேரும்.

ஆடி அமாவாசையில் சகுனி கர்ணம், பூச நட்சத்திரமும் இருப்பது மிகவும் விசேஷம். அதேபோல், சூரியனின் கிழமையான ஞாயிற்றுக்கிழமை வருவதும் இந்த ஆண்டு சிறப்பாகும். மொத்தம் 8 இடங்களில் சாஸ்தா கோயில்கள் அமைந்துள்ளது. இதில் முக்கியமான சாஸ்தா சொரிமுத்து அய்யனார். இங்கு வன தேவதைகள் அதிகம் இருக்கிறார்கள்.

திதி கொடுப்பதற்கு நல்ல நேரம்: இந்த ஆண்டு ஆடி அமாவாசையில் சூரிய உதயம் கன்னியாகுமரியில் 06.08 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில் 4 நிமிடங்கள் தாமதமாக காலை 6.15-க்கு மேல் பகல் பொழுது பிற்பகல் 2 மணிக்குள் திதி கொடுப்பது நல்லது” இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, ஆன்மீக செயற்பாட்டாளர் சிவசுப்ரமணியன் கூறுகையில், “மாதந்தோறும் வரும் அமாவாசையில் கொடுக்கும் தர்பணம் எமதர்மராஜா கையில் சென்று, அதன் பிறகு தான் முன்னோர்கள் கையில் சென்று சேரும். ஆனால், ஆடி அமாவாசையில் செய்யக்கூடிய தர்ப்பணத்தின்போது முன்னோர்களே நேரடியாக நமது வீட்டிற்கு வருவார்கள். அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க காசி, ராமேஸ்வரம் செல்வார்கள்.

ராமேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் நெல்லை அருகே முறப்பநாட்டில் இருக்கக்கூடிய தஷ்ண காசி எனப்படும் கைலாசநாதர் கோயில் சென்று, அங்குள்ள ஆற்றில் திதி கொடுக்கலாம். மேலும், நெல்லை அருகன்குளத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலுக்குச் செல்லலாம். இங்கு ராமர் அவரே தனது கையால் ஜடாயுவுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளார். இங்கு ராமர் கையில் பிண்டத்தை வைத்திருப்பார். ராமர் ஆஞ்சநேயர் இல்லாமல் எங்கேயுமே இருக்க மாட்டார். ஆனால், இந்த கோயிலில் ஆஞ்சநேயர் கிடையாது இதுதான் கோயிலின் சிறப்பு” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 4,000 வகை நெல் விதைகளை இழந்துள்ள தமிழகம்.. வணிகத்தின் உச்சத்தில் மரபணு விதைகள்.. வேளாண் அறிஞர் கூறுவது என்ன? - traditional seeds

Last Updated : Aug 4, 2024, 6:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.