ETV Bharat / state

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு; ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவது யார்? - எகிறும் எதிர்பார்ப்பு! - 2024 INDIA ELECTIONS

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மறைந்தகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2024, 9:53 PM IST

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60-வார்டுகளில் 37-வார்டுகள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உள்ளாக வருகிறது. பரப்பளவில் சிறியதாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 53- வாக்குச்சாவடி மையங்களில் உள்ளன. அதில், உள்ள 237 வாக்குச்சாவடியில் 110,305- ஆண் வாக்காளர்களும், 117,142 பெண் வாக்காளர்களும் 33- மாற்றுப் பாலினத்தவர்களும் என மொத்தம் 227,480 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் தொடங்கி ஈரோடு மையப் பகுதியில் உள்ள பிராமண பெரிய அக்ரஹாரம் வரை நகரின் மையப்பகுதி அனைத்தும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்ளாக வருகின்றது. கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தமிழகமே உற்று நோக்கும் இடைத்தேர்தலாக அமைந்தது.

இந்த இடைத்தேர்தலில் ஆளும் திமுக கட்சியினர் முழு பலத்துடன் அனைத்து துறை அமைச்சர்கள் முதல் கட்சியினர் வரை களத்தில் இறக்கி ஈரோடு மாநகராட்சி 37-வார்டுகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மூன்றாவது முறையாக இடைத்தேர்தல்? :

இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், அதற்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டால் இடைத்தேர்தலின் போது ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போர்க் கொடியைத் தூக்கிய காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜனுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா? அல்லது திமுகவே வேட்பாளரை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அவ்வாறு திமுகவே இடைத்தேர்தலில் நேரடியாக வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில், தேமுதிக சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்து திமுகவிற்கு சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமாருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: "இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்"-மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் மீண்டும் கடிதம்!

அதிமுக புறக்கணிப்பு? : அதிமுக சார்பில் 2016ம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு மீண்டும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தோல்வி அடைந்தார்.

இதனால் இந்த முறை தென்னரசுவுக்கு பதில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், பொதுத்தேர்தலுக்கு 1.5 வருடங்கள் உள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது போல இந்த முறையும் அதிமுக புறக்கணிப்பு செய்யும் என கூறப்படுகிறது.

பாஜக வேட்பாளர் : அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாரதிய ஜனதா கட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் வேட்பாளர் முடிவு செய்யும் எனவும் கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் மீண்டும் மேனகா நவனீதன் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.

புதியதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜயின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராகவும் தற்போது கட்சியின் மாவட்ட தலைவராகவும் உள்ள பாலாஜிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி, காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிக்கு 6 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும். இதனால் இன்னும் சில நாள்களுக்குள் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.