ETV Bharat / state

வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்! - Chief ministers Breakfast scheme

Chief Ministers Breakfast Scheme: தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chief Ministers Breakfast Scheme
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 10:25 PM IST

சென்னை: தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துவது குறித்தும், திட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி இயக்குநர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் தொடக்ககல்வி இயக்குநரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' விரிவுபடுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

எனவே, வரும் கல்வியாண்டில் (2024 - 2025) இத்திட்டம் ஊரகப் பகுதிகளில் செயல்படும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் நோக்கில் விரிவுபடுத்தப்பட உள்ளது. சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்த ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலை உணவு வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளிகளில், மதிய உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்டது போல், இத்திட்டத்திற்கும் அப்பள்ளியிலேயே தனியாக உணவுப் பொருட்கள் வைப்பதற்கும், சமையல் செய்வதற்கும் தேவையான இடவசதி அமைத்து கொடுப்பதற்கும், இத்திட்டம் முழுமையாகவும், செம்மையாகவும், செயல்படுத்துவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்திடவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், மாவட்டக்கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து, 1 வார காலத்திற்குள் அப்பள்ளிகளை பார்வையிட்டு, காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர்களை இணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாவட்ட அளவில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 1,14,095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கும் நோக்கத்தில் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கூடுதலாக 433 மாநகராட்சி, நகராட்சி, அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 56,160 மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்புறப் பகுதிகள் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) மற்றும் ஊரகப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களும் பயனடையும் வகையில் 31,008 அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கைது செய்ய வலியுறுத்தி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.