ETV Bharat / state

என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் ரத்து.. காரணம் இது தானா? - Velladurai allowed to retire - VELLADURAI ALLOWED TO RETIRE

ADSP Velladurai suspended order cancelled: ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு, நிபந்தனையுடன் ஓய்வு பெற அனுமதிப்பதாக தமிழ்நாடு அரசு உள்துறை அறிவித்துள்ளது.

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை
ஏடிஎஸ்பி வெள்ளத்துரை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 8:48 AM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆகப் பெயர் எடுத்தவர், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பனை சுட்டுக் கொண்ட குழுவிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் சென்னை பிரபல ரவுடியாக வலம் வந்து கொண்டு இருந்த அயோத்திகுப்பம் வீரமணி என்கவுண்டரில் முக்கிய பங்கு வகித்தார்.

இதேபோல் கொடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 12 ரவுடிகளை என்கவுண்டர் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை நிறைந்த பகுதிகளில் ரவுடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவணக் காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியிலிருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வெள்ளத்துரை பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், திடீரென நேற்று மாலை அவரை பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா இதற்கான உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரத்தை தான் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தன் மீது எந்த தவறும் இல்லை என ஏடிஜிபி வெள்ளத்துரை தரப்பில் கூறப்பட்டது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் ஏன்? கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த ரவுடி ராமு என்கிற கொக்கி குமார் என்பவர் காவல் நிலைய கஸ்டடியில் உயிரிழந்தது சம்பந்தமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இதில் வெள்ளதுரைக்கும் சம்பந்தம் இருப்பதாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் வரவுள்ளது. இந்த நிலையில், வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வெள்ளதுரையை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

சஸ்பெண்ட் ரத்து: இந்த விகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த நிலையில் சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளை துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளத்துரை நிபந்தனையுடன் ஓய்வு பெற தமிழ்நாடு அரசு உள்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதில், வெள்ளத்துரை சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளில் மொத்தம் 5 லட்ச ரூபாய் பிடித்தம் செய்யப்படும் எனவும், ஓய்வுக்குப் பிறகு அரசு வழங்கும் பண பலன்களில் 5 லட்ச ரூபாய் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மாநில மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கை எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடபட்டுள்ளது.

இதையும் படிங்க: அக்னிபான் சோதனை எதற்கு? அடுத்த இலக்கு இதுவா? சென்னை ஐஐடியின் பிரத்யேக தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.