ETV Bharat / state

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 Vs மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024.. என்னென்ன மாற்றங்கள்? முழு விவரம்! - Liquor Prohibition Amendment Bill - LIQUOR PROHIBITION AMENDMENT BILL

M.k.Stakin: கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், புதிய தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024 இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

புதிய மதுவிலக்கு திருத்தச் சட்டம்
தலைமைச் செயலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 9:18 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரையில் 67 பேர் மரணம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் விதமாக கடந்த ஜூன் 29ஆம் தேதி தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், நேற்று ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில், இன்று முதல் புதிய தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024 அமலுக்கு வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தின் விவரங்கள்:

பிரிவு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024
4(1) (aaa) 100 லிட்டருக்கு மேல் சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி போக்குவரத்து அல்லது வைத்திருத்தல்

மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்குக் குறைவில்லாத கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

4(1)(b)சட்டவிரோதமான மதுபானம் தயாரித்தல்
4(1)(f)சட்டவிரோதமான மதுபான ஆலை (Ilicit distillery) அல்லது மதுபான நொதி வடிப்பாலையினை (Brewery) கட்டுதல்
4(1)(h)விற்பனைக்கான சட்டவிரோதமான மதுபானங்களை குப்பியில் அடைத்தல் ஆகியவற்றிற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம்.
4(1)(aa) 50 லிட்டருக்கு மேல் 100 லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல் குற்றத்திற்கு அதிகபட்சமாக 6 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 ஆயிரம் அபராதம்.பிரிவு 4(1)(B)ன்படி, 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
4(1)50 லிட்டர் வரையிலான சட்டவிரோதமான மதுபானம் இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து அல்லது வைத்திருத்தல்4(1)(C)ன்படி, ஓராண்டுக்கு குறையாத மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் முதல் ரரூ. 1 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
சட்ட விரோதமான மதுபானம் அருந்துதல் மற்றும் வாங்குதல்
மேற்கண்ட குற்றங்கள் புரிவதற்குப் பணம் செலவழித்தல்
உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ. 1000 வரையிலான அபராதம்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு வகை மதுபானம், வெளிநாட்டு மதுபானம் நொதிபானம் (Fermented Liquor) மற்றும் நொதித்த பழரச மதுவகை (Fermented Fruit Juice Wine) போன்ற அறிவிக்கப்பட்ட மதுபானங்களின் போக்குவரத்து, வைத்திருத்தல் மற்றும் அருந்துதல் தொடர்பான குற்றங்களுக்கு சட்டவிரோதமான மதுபானம் வைத்திருத்தல், அருந்துதல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கான தண்டனை.

4(1)(c)-ன் படி, ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

4 (1- A) மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இதுவரை ஆயுட்காலத்திற்கு கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் குறையாத அபராதம்

ஆயுட்காலத்திற்குக் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் குறையாத அபராதம் விதிக்கப்படும்.

மதுவை உட்கொள்வதால் இறப்பை ஏற்படுத்தாத பிற கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோதமான மதுபானம் தொடர்புடைய குற்றங்களுக்கு, இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.7 ஆஇரம் அபராதம்

5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

5மனிதர்கள் அருந்துவதற்கு ஏற்றத்தக்க வகையில் இயல்பு மாற்றப்பட்ட சாராவியை (denatured spint) மாற்றினால் அல்லது மாற்ற முயற்சி செய்தால், அதற்கு இதுவரை 3 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரையிலான அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. 3 முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
5ஏ-யின்படி, மது அருந்துவதற்கு உரிமம் இல்லாத இடங்களைப் பயன்படுத்தும் குற்றத்திற்குப் புதிய பிரிவாக, அந்தக் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இடம் வேறு எவரும் பயன்படுத்தாமல் தடுப்பதற்காகப் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும்.
6மதுபானம் தொடர்பான விளம்பரங்களைச் செய்தல் குற்றத்திற்கு, ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது ரூ.1000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டு வந்தது.

2 முதல் 5 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ, 2 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

7கூட்டுச்சதி குற்றத்திற்கு, 4ஆம் பிரிவின் கீழ் பெருங்குற்றங்களுக்காக 3 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் வரையிலான அபராதம் மற்றும் 4 ஆம் பிரிவின் கீழ் சிறிய குற்றங்களுக்கு 3 மாதங்கள் வரையிலான சிறை தண்டனை அல்லது ரூ. 1000 வரையிலான அபராதம் ஆகியவை விதிக்கப்பட்டு வந்தன.4 ஆம் பிரிவின் கீழ் குற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட அதே தண்டனை மற்றும் சட்டத்தின் வகைமுறைகளைத் தவிர்க்க அல்லது பயனிழக்கச் செய்ய சதி செய்ததற்காக 1 முதல் 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
11வகைசெய்யப்படாத குற்றங்களுக்கு இதுவரை 6 மாதங்கள் வரை சிறைதண்டனை அல்லது ரூ. 500 வரை அபராதம் அல்லது இரண்டும் என விதிக்கப்பட்டு வந்த தண்டனை.ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் என விதிக்கப்படும்.
24-Dகுற்றச் செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்கான அதிகாரம் ரூ.10,000 மேற்படாமல் ஆனால், ரூ.1000க்குக் குறையாமல் பெருங்குற்றங்களைத் தவிர இதர குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்குக் கூட்டுக்கட்டணம் விதிக்கப்பட்டது.ரூ.25,000 மேற்படாமல் ஆனால், ரூ.1000 க்குக் குறையாமல் பெருங்குற்றங்களைத் தவிர இதர குற்றச்செயல்களை இணக்கமாகத் தீர்த்துக் கொள்வதற்குக் கூட்டுக்கட்டணம் விதிக்கப்படும்.

இது தவிர மேற்கூறிய குற்றங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து அசையும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். கள்ளச்சாராயம் தொடர்பான மோசமான குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களிடம் இருந்து அவர்களது நன்னடத்தைக்கான பிணைய பத்திரத்தைப் பெற இச்சட்டத்தின் கீழ் நிர்வாக நடுவருக்கு (Executive Magistrate) அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய சட்டத்தின் கீழ் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு, ஏற்கனவே தண்டிக்கப்பட்ட ஒரு நபர் மீண்டும் தண்டிக்கப்படும் போது, அந்த நபரின் சிறைவாசம் முடிந்த பின்பு, அவரது தற்போதைய வசிப்பிடப் பகுதியிலிருந்து அவர் வெளியேறி வேறொரு மாவட்டத்திற்கு அல்லது வேறொரு பகுதிக்குச் சென்று வசித்திட உத்தரவு பிறப்பிக்குமாறு மதுவிலக்கு அலுவலர்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க இத்திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள் பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞரின் சம்மதமின்றி பிணை வழங்க இயலாத வகையில் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்! - Prohibition Amendment Bill

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.