ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. மீண்டும் நான்கு முனை போட்டி தேர்தல் களத்தில் நிகழுமா? - Vikravandi bye election

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 2:28 PM IST

Vikravandi bye election: விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்த நிலையில், விரைவில் அத்தொகுதிக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: தமிழ்நாட்டில் தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்தார். எனவே, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போதே இடைத்தேர்தல் நடத்தப்படும் அல்லது ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்து, இந்தியா முழுவதும் கடந்த ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தினம் வரை விக்கிரவாண்டி தொகுதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தான் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி உயிரிழந்தார். எனவே, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஒரு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்த வருகின்ற அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. இருப்பினும் முன்னதாகவே தேர்தல் நடத்த முடிவு செய்தால் அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் 51 கிராம ஊராட்சிகள், காணை ஊராட்சி ஒன்றியத்தின் 45 ஊராட்சிகள், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் 7 ஊராட்சிகள், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 1 ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சியை உள்ளடக்கியது.

விழுப்புரம் தாலுகா (பகுதி) நல்லாபாளையம், கடயம், கருவாட்சி, பனமலை, சின்னப்பநாயக்கன்பாளையம், சங்கீதமங்கலம், நங்காத்தூர், நகர், செஞ்சிபுதூர், செஞ்சி, குன்னத்தூர், திருநந்திபுரம், பிடாரிப்பட்டு, எண்ணாயிரம், பிரம்மதேசம், எஸ்.கொளப்பாக்கம், முட்டத்தூர், சலவனூர், வெள்ளையாம்பட்டு, குணிர்கணை, உடையாநத்தம், வெங்கமூர், அனுமந்தபுரம், திருக்குணம், அன்னியூர் ஆகிய கிராமங்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெருங்கலாம்பூண்டி, கன்னந்தல், கலியாணம்பூண்டி, அரசலாபுரம், மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், எசாலம், தென்பேர், நந்திவாடி, நேஊர், மேல் காரணை, போரூர், அத்தியூர், திருக்கை, வெள்ளேரிப்பட்டு, சித்தேரி, ஏழுசெம்பொன், கொரலூர், வெங்கயாகுப்பம், நரசிங்கனுர், சின்னடச்சூர், கொங்கராம்பூண்டி, சாலை (விக்கரவாண்டி), குத்தாம்பூ ஆகிய கிராமப் பகுதிகளை கொண்டது விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஆகும்.

சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால் விக்கிரவாண்டியில் அதிகப்படியான உணவகங்கள் உள்ளன. மேலும் இத்தொகுதியில் சர்க்கரை ஆலை, சாராய ஆலை, குறு மின் உற்பத்தி நிலையம், ஒரு நூற்பாலை, நவீன அரிசி ஆலைகள், முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தனியார் பொறியியல் கல்லுாரிகள் அமைந்துள்ளன. நெல், கரும்பு, விவசாயம் இங்கு பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின் படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608, பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு கண்டமங்கலம்(தனி ) தொகுதி கலைக்கப்பட்டு தொகுதி மறு சீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி உருவானது. கடந்த 2011 தேர்தலே இத்தொகுதிக்கு முதல் தேர்தலாகும். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி (51.71% சதவித வாக்குகள்) அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ராதாமணியை (41.93% சதவித வாக்குகள்) 14897 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பின்னர் ராமமூர்த்தி 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.இராதாமணி 6912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைதொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கு.இராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வம் திமுக வேட்பாளர் புகழேந்தியை 44924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் புகழேந்தி பொன்முடியின் நேரடி ஆதரவில் போட்டியிட்டார்.

அப்போது இதேபோன்று அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வனை விட 9,573 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வட தமிழ்நாடு பகுதியில் அமைந்துள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வன்னியர்கள் மற்றும் தலித் சமூகத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். மேலும், இங்கு பாமக பலமாக உள்ளதாக அறியப்படுகிறது. அதே போல தேமுதிகவுக்கும் அதிக தொண்டர்கள் பலம் அப்பக்குதியில் உள்ளது. மேலும் திமுகவின் செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படும் உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இருக்கிறார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பொன்முடி தேர்தலுக்காக வகுத்த வியூகம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை தந்ததாக கூறப்படுகிறது. மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வாய்ப்பாக வைத்து தனது மகன் கவுதம சிகாமணியை போட்டியிட வைக்க வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு தனது மகன் கவுதம சிகாமணி முன்னிறுத்தப்படுவார் என ஆவலுடன் காத்திருந்ததாகவும், பொன்முடிக்கு அதிர்ச்சி தரும் சம்பவமாக மலையரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாகவும், இதனால் அவர் சற்று கவலையில் இருந்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பொன்முடியை மகிழ்விக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் வரும் சட்டமன்ற தேர்தலில் கவுதம சிகாமணியை வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற பேச்சும் எழுகிறது. மேலும், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் விசிக சார்பில் பானை சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் தபால் வாக்கு மற்றும் முதல் சுற்றுகளில் இருந்தே முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பொன்முடி மற்றும் கௌதம சிகாமணியின் தேர்தல் பிரச்சாரமே காரணமாக பார்க்கப்படுகிறது.

தனது மகனை சட்டமன்ற உறுப்பினரானால் தமக்கு ஒரு சட்ட பாதுகாப்பு இருக்கும் என எனக் கருதி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் கண்டிப்பாக தனது மகனுக்கு சீட் வாங்கி விடுவார் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். பொன்முடி விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு வரலாற்று வெற்றியை பெற்று தந்தாலும் தலைமை கழகம் சற்று லேசான தயக்கம் காட்டுவதாகவும், பொன்முடி சில மேடைகளில் பேசியதுதான் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய குடைச்சல் தரும் பிரச்சனையாக உள்ளதாகவும், மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 என வெற்றி பெற்று விட்டு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் தனது ஆட்சிக்கு சிறு சங்கடத்தை ஏற்படுத்தும் என முதலமைச்சர் நினைக்கிறார் என்ற கருத்தும் திமுகவினர் மத்தியில் நிலவுகிறது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தலைமை கழகத்தில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி மறைமுகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக உள்ள ஜெயசந்திரன் அல்லது திமுக விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா ஆகியோர் போட்டிக்கான பட்டியலில் உள்ளதாகப் பேச்சுக்கள் எழுகிறது.

மேலும், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி சூடியுள்ளதால், அதிமுக அணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் பரப்பரை மேற்கொண்டால் மக்கள் அவருடைய மேடைப் பேச்சுக்களை ஏற்றுக்கொள்வார்களா என்கிற குழப்பத்தில் சிவி சண்முகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இம்முறை விக்ரமாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி, நாதக இடையே நான்கு முனை பலமான போட்டி நிலவுவதாகவும், மாநில கட்சியாக அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் கட்சி நன்கு பரிட்சயமான ஒருவரை தேர்தலில் இறக்கிவிட்டு மீண்டும் வாக்குகளை பிரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: விழுப்புரத்தை மீண்டும் கைப்பற்றிய ரவிக்குமார்! - LOK SABHA ELECTION RESULT 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.