ETV Bharat / state

அதிமுகவில் மற்றொரு அணி.. எடப்பாடிக்கு அழுத்தம்? - தலைவர்கள் கூறுவது என்ன? - Edappadi Palaniswami - EDAPPADI PALANISWAMI

AIADMK: நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எழுந்துள்ள மாற்றுக் கருத்துக்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை எவ்வாறு இருக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தலைவர்கள் மாறி மாறி கருத்து கூறி வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக நடப்பது என்பது குறித்தான அலசல்

அதிமுக தலைவர்கள்(கோப்புப்படம்)
அதிமுக தலைவர்கள்(கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 3:59 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல் தலை தூக்கியுள்ளது. தேர்தலில் 34 தொகுதிகளில் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக ஒரு இடங்களை கூட கைப்பற்றவில்லை. மேலும், போட்டியிட்ட 7 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்த தென் மாவட்டங்களில் வாக்குகள் கடுமையாக சரிந்துள்ளன. ''2026 சட்டமன்ற தேர்தலில் இதே நிலை தொடர்ந்தால் அதிமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும்" என்று அதிமுகவினரே சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக கூட்டணிக்கு விரும்பும் எஸ்.பி. வேலுமணி?: குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தை அதிமுக கோட்டை விட்டது பேசுபொருளானது. அதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ''அதிமுக-பாஜக கூட்டணி பிளவு ஏற்பாடாமல் இருந்திருந்தால் 30 முதல் 35 சீட்கள் கிடைத்து இருக்கும்" என கருத்து கூறியதோடு கூட்டணி பிளவுக்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய அண்ணாமலை ''நான் மாநில தலைவராக இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி இல்லை'' என திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால், தேர்தலுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்த சூழலில் அதிமுகவின் தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணி முறிவும் காரணம் என்று எஸ்.பி. வேலுமணி கூறியது சலசலப்பை உண்டாக்கியது.

கூட்டணி பிளவால் இழப்பில்லை: அதே சமயம் தேர்தல் தோல்வி குறித்து பேசிய ஈபிஎஸ், ''அதிமுகவிலிருந்து சிலர் பிரிந்து போன பிறகு அதிமுகவிற்கு ஒரு சதவீத வாக்குகள் அதிகரித்துள்ளது'' எனக் கூறினார். எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கவோ, அதேபோல, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனை கட்சியில் இணைத்துக்கொள்ளவோ விரும்பவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வாக்குகளை பாஜக பிரித்திருப்பதும், சில தொகுதிகளில் அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளியிருப்பதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்தாலும், எடப்பாடி பழனிசாமி அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்லை. தற்போதுள்ள நிர்வாகிகளோடு அதிமுக நகர வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.

நிர்வாகிகள் கலக்கம்: ஆனால், தேர்தலில் டெப்பாசிட் இழப்பு, சில இடங்களில் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது, பலமான தொகுதிகளிலேயே ஏற்பட்ட வாக்கு சரிவு இதையெல்லாம் அலசும் அதிமுக நிர்வாகிகள் சிலர் 2026 தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோரை மையப்படுத்தி சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. அண்மையில் கோவையில் நடந்த செங்கோட்டையன் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகிகள், செங்கோட்டையனிடம் கட்சியை பலப்படுத்துவது குறித்து பேசியதாக தகவல் கசிந்துள்ளது. அது குறித்து வெளிவந்த செய்தியை கேசி பழனிசாமி அதிகாரபூர்வமாகவே எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ''பாஜகவுடன் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்பதை தேர்தல் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம். தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை கட்சியில் ஒன்றிணைக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் கட்சி காணாமல் போய்விடும். எனவே எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து விவாதிக்க வேண்டும்'' என்று செங்கோட்டையனிடம் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்டுள்ளது.

கே.சி.பழனிசாமி முனைப்பு: அதேபோல, கேசி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் ''அடிமட்ட அதிமுக தொண்டனின் குரல்'' என்று ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ''ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் அனைவரும் ஒன்றிணையும் பொழுது யார் யாருக்கு என்னென்ன பதவிகள் தரப்பட வேண்டும் என்று உங்களது ஒருங்கிணைப்பு குழு பேச்சு வார்த்தையில் முன்னெடுக்குமா? உங்கள் முயற்சி ஒன்றிணைந்தால் வலுவான அண்ணா திமுக உருவாகும் என்பதில் மாற்றம் இல்லை'' என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஒருங்கிணைப்பு அணி என கேசி பழனிசாமி தீவிர முனைப்பு காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனின் சறுக்காத பேச்சு: மேலும், தேர்தலுக்கு முன்பு திமுக அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக பிளவுபடும் என்றும் அதற்கு பிறகு அதிமுக செங்கோட்டையின் தலைமையில் அல்லது வேலுமணி தலைமையில் செல்லுமா என்பது தெரியவரும்'' என்று சொல்லி பரபரப்பை கிளப்பினார்.

அதற்கு எதிர்வினையாற்றிய செங்கோட்டையன் ''எனது 45 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும். ஆனால், அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கும் கருத்து கண்டிக்கத்தக்கது'' என பதிலடி கொடுத்தார்.

ஓ.பன்னீர்செல்வம் ரியாக்ஷன்: "கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியை கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்ற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிமுகவில் தற்போது நிலவி வரும் மாற்று கருத்துக்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்னவாக இருக்கப் போகிறது? 2026 தேர்தலுக்கான முன்னெடுப்புகள் என்னென்ன? நாடாளுமன்ற தோல்விக்கு பிறகு கட்சியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பினை எவ்வாறு சரி செய்வது? நிர்வாகிகளுக்கிடையே எழும் குழப்பங்களை எப்படி கலைப்பது என்பதையெல்லாம் குறித்து ஆலோசனை நடத்தப்படுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் சார்பில் களமிறங்கும் மருத்துவர் அபிநயா.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.