திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்களிடம் தகவல் பரவியது. அதிலும் சிலர், அந்த நிலநடுக்கத்தை உணர்ந்தாக தெரிவித்துள்ளனர். அதன்படி, அம்பாசமுத்திரம் தாலுகாவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அருகில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கடையம், சிவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
அதேபோல், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடுக்கும் ஏற்பட்டதாகவும், மக்கள் அதை உணர்ந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும், அம்பாசமுத்திரம் பகுதியில் மக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் அமர்ந்தனர்.
நெல்லை, தென்காசியில் நில அதிர்வு?#earthquake #tirunelveli #நிலஅதிர்வு #TamilnaduNews #நெல்லை #தென்காசி#PublicReview #ETVBharatTamilnadu pic.twitter.com/oGjii1PdzA
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 22, 2024
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்..வீடுகள், அலுவலங்களில் இருந்தவர்களின் நிலை என்ன?
ஆனால், நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், “தற்போது வரை அரசின் Seismo இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வரப்பெறவில்லை. இதுவரை யாருக்கும் காயமோ, பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. களஅலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்” தெரிவித்துள்ளது
நெல்லையில் நில அதிர்வு - களத்தில் அதிகாரிகள்#earthquake #tirunelveli #நிலஅதிர்வு #TamilnaduNews #TNGovt #நெல்லை #ETVBharatTamilnadu pic.twitter.com/23KWtrnRkx
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) September 22, 2024
அதேநேரம், மக்களிடம் ஏன் இந்த தகவல் பரவியது என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஒருவேளை அம்பாசமுத்திரம் பகுதிகளில் கல் குவாரியில் வெடித்ததில் ஏற்பட்ட சத்தத்தால் அப்பகுதியில் லேசான அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே, அந்த அதிர்வை மக்கள் நில நடுக்கம் என்று உணர்ந்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.