ETV Bharat / state

மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிவா? - நிலா சீ புட்ஸ் தரப்பு விளக்கம் என்ன? - THOOTHUKUDI AMMONIA GAS LEAK - THOOTHUKUDI AMMONIA GAS LEAK

THOOTHUKUDI AMMONIA GAS LEAK: தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிலா சீ புட்ஸ் தொழிற்சாலையில் அமோனியா கசிவு இல்லை என ஆலை நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆலை நிர்வாகத்தினர் செய்தியாளர் சந்திப்பு
ஆலை நிர்வாகத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 3:04 PM IST

Updated : Jul 20, 2024, 3:42 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் பகுதியில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிலா சீ புட்ஸ் (Nila Sea Foods) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆலை நிர்வாகத்தினர் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சுமார் 11 மணியளவில் அந்த ஆலையில் ஏற்பட்ட மின் விபத்தில் அமோனியா கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 16 பெண்கள் உட்பட 29 பெண்கள் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

பின்னர், சம்பவ இடத்தில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீயணைப்பு வீரர் ஒருவரும் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நிலா சீ புட்ஸ் தொழிற்சாலையின் மேலாளர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வழக்கமாக ஆலையில் பகல், இரவு என 2 நேர ஷிப்ட் நடக்கும். இதில் இரவு நேரத்தில் பணியில் வேலைக்காக இருந்தவர்கள் உணவு அருந்த சென்ற நிலையில், ஏசியின் வயரில் மின் கசிவு ஏற்பட்டது.

இதனால் லேசாக தீப்பிடித்து, பின்னர் அது புகை மண்டலமாகியது. இதனால், அச்சத்தில் தொழிலாளர்கள் அலறியபடி ஓடினர். அதில், சில பெண் தொழிலாளர்கள் கீழே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர், அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 6 பேர் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினர். தீ விபத்தின் போது அமோனியா சிலிண்டர் வெடித்து கசிவு ஏற்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் வதந்தி" என நிலா சீ புட்ஸ் மேலாளர் வேல்முருகன் தெரிவித்தார்.

விபத்து நிகழ்ந்த தொழிற்சாலையில் போலீசார், தீயணைப்பு துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே பணியாளர்கள் மயக்கமடைந்ததற்கு உண்மையான காரணம் தெரியவரும்

ஈடிவி பாரத்
ஈடிவி பாரத் (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழக அரசின் பசுமையாளர் விருது பெற்ற அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் காலமானார்

Last Updated : Jul 20, 2024, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.