ETV Bharat / state

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்புகள் இதுதான்.. பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்! - union budget 2024

Union budget 2024: மத்திய பட்ஜெட் 2024-ல் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 4:23 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை (ஜூலை 22) கூடுகிறது. அதனைத் தொடர்ந்து, ஜூலை 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 7வது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களுக்கு தேவையான ஒப்புதல் மற்றும் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு நிறைவேற்றுமென நம்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் 2024-ல், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி அளிக்க வேண்டும். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பத்தாண்டுகளாக வருமான வரிச்சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: “49 தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை” - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிரத்யேக தகவல்! - Bangladesh viloence

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.