ETV Bharat / state

தேனி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத் தீ.. 200 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்! - Western ghats Hill forest fire

Western Ghats Hill forest fire: மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயினால் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் வனப்பகுதி எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை காட்டுத் தீ
மேற்குத் தொடர்ச்சி மலை காட்டுத் தீ (credits - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 4:40 PM IST

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நாள்தோறும் காட்டுத் தீ பல்வேறு இடங்களில் பற்றி எரிந்து வருகிறது. இந்த நிலையில், சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக பெரியகுளம் அருகே உள்ள அகமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊரடி, ஊத்துக்காடு வனப்பகுதியில் தொடர்ந்து காட்டு தீ பற்றி எரியத் துவங்கியது.

மேலும், பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போதும், மிகவும் உயரமான மலைப் பகுதி என்பதால் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயால் வனப்பகுதியில் அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து சேதம் அடைந்து வருவதோடு, வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, இக்காட்டுத் தீயை விரைந்து அணைக்க வேண்டும் என்பதே அப்பகுதி வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கஞ்சா என நம்பி மாட்டுச்சாணம் வாங்கிய இளைஞர்கள்.. திருப்பூரில் நூதன மோசடி! - Cow Dung Sales Instant Of Ganja

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.