ETV Bharat / state

மனுநீதி நாள் முகாம்: 161 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தென்காசி கலெக்டர்! - tenkasi Welfare programme - TENKASI WELFARE PROGRAMME

தென்காசி ஆலங்குளம் கீழக்கலங்கல் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்த மனுநீதி நாள் முகாமில், 161 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 79 ஆயிரத்து 848 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி ஆலங்குளம் மனு நீதி நாள்
தென்காசி ஆலங்குளம் மனு நீதி நாள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 4:20 PM IST

தென்காசி: வீரகேரளம் புதூர் வட்டம், கீழக்கலங்கல் மற்றும் மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் 161 பயனாளிகளுக்கு 31 லட்சத்து 79 ஆயிரத்து 848 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் வழங்கினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர். மேலும், இந்த முகாமில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வருவாய்த் துறையின் மூலம் 118 பயனாளிகளுக்கு ரூ.31,47,768 மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.2400க்கான முதியோர் உதவித் தொகையினையும், வழங்கினார்.

இதையும் படிங்க: சைதாப்பேட்டை டூ திருப்பூர்: போலீஸ் கட்டத்தில் மகாவிஷ்ணு.. பரம்பொருள் அறக்கட்டளையில் நடப்பது என்ன?

மேலும், ரூ.3000 மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையினையும், 7 பயனாளிகளுக்கு ரூ. 9480 மதிப்பிலான பட்டா மாறுதலுக்கான (உட்பிரிவு அல்லாதவை ) ஆணையினையும், 6 பயனா ளிகளுக்கு ரூ.6400 மதிப்பிலான பட்டா மாறுதலுக்கான (உட்பிரிவு உள்ளவை) ஆணையினையும், 10 பயனாளிகளுக்கு ரூ.500 மதிப்பிலான தென்னைமரக் கன்றுகளையும், இந்நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, வீரகேரளம் புதூர் வட்டாட்சியர் சுடலைமணி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் செல்வக்கொடி, ராஜாமணி, மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன், அரசு ஒப்பந்தக்காரர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பால சரஸ்வதி முருகையா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு பயனாளிக்கு ரூ.3,300 மதிப்பிலான எலுமிச்சை பரப்பு விரிவாக்கத்தினையும், 1 பயனாளிக்கு ரூ.3,600 மதிப்பிலான நெல்லி பரப்பு விரிவாக்கத்தினையும், 1 பயனாளிக்கு ரூ.3,000 மதிப்பிலான தென்னை பரப்பு விரிவாக்கத்தினையும், வேளாண் மைத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு உளுந்து விதைகளையும், 1 பயனாளிக்கு சூரியகாந்தி விதைகளையும், 1 பயனாளிக்கு மக்காச்சோள விதை களையும் என மொத்தம் 161 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 79 ஆயிரத்து 848 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.