ETV Bharat / state

வட மாவட்டங்களில் எப்போது வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்? - வானிலை தன்னார்வலர் கூறுவது என்ன?

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் வலுப்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

மழை தொடர்பான கோப்புப்படம், வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த்
மழை தொடர்பான கோப்புப்படம், வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 4:44 PM IST

சென்னை : வடகிழக்கு பருவமழை மேலும் வலுப்பெறுவது தொடர்பாக வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், தற்போது வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது நாளை அந்தமான் பகுதியில் மேலடுக்கு சுழற்சியாக உருவெடுத்து படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறக்கூடும்.

மேலும், இது மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தென்னிந்திய தீபகற்ப பகுதியை நோக்கி வரும் பொழுது நமக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம்.

அதேபோல குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது எந்த திசையை நோக்கி நகர இருக்கிறதோ அதை பொறுத்து தான் மழை எவ்வளவு பெய்யும் என்பதை கணிக்க முடியும். கடலோரப் பகுதிகளில் கடந்து வந்தால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கிழக்கிலிருந்து வரக்கூடிய காற்று வலுப்பெற்றவுடன் உள் மாவட்டங்களில் பெய்து வரும் மழை சற்று குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கடந்த நாட்களில் காற்றின் திசை மாறியதால் உள் மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. தற்போது கிழக்கிலிருந்து காற்று வர தொடங்கி இருப்பதால் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வடகிழக்குப் பருவமழை எப்போது வலுப்பெறும்? - வானிலை தன்னார்வலர் ஸ்ரீகாந்த் கணிப்பு!

கிழக்கில் இருந்து வரக்கூடிய காற்று அடுத்த 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று கடலோர மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அந்தமான் பகுதியில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக மட்டுமே மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாக உள்ளது.

நாளை முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பலத்த மழையாக இருக்காது. இந்த மழையானது காலை மற்றும் இரவு நேரங்களில் பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தற்போது உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேல்நோக்கி நகர்ந்தால் தமிழகத்திற்கான மழை குறைந்து காணப்படும் அல்லது தமிழகத்தை நெருங்கி வரும் சூழலில், நவம்பர் மத்தியில் இருந்து மழை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.