ETV Bharat / state

அப்பாவுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும்.. சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை! - speaker appavu defamation suit - SPEAKER APPAVU DEFAMATION SUIT

சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது சட்டப்படி தவறு. அடுத்த விசாரணையின்போது கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சபாநாயகர் அப்பாவு (கோப்புப் படம்)
தமிழக சபாநாயகர் அப்பாவு (கோப்புப் படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2024, 12:12 PM IST

சென்னை: அதிமுக சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாததைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.

இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதையும் படிங்க: மணலில் விளையாடிய போது பள்ளி மாணவிகளுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம்

கடந்தமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராகி சம்மனை பெற்றுக் கொண்டார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராகவில்லை.

இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பது சட்டப்படி தவறு. அடுத்த விசாரணையின் போது கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து, விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.