ETV Bharat / state

குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.. கொடைக்கானல் மலைக்கிராம மக்களே வாக்களிக்கத் தவறாதீர்! - Lok Sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Arrangements for Election polling: வெள்ளைகெவி, மஞ்சம்பட்டி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு கொடைக்கானல் மலைக் கிராமங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், குதிரைகள் மூலம் வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 4:12 PM IST

குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திண்டுக்கல்: 17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து, 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரே கட்டமாக நாளை (ஏப்.19) நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதியிலும் 950 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தமிழ்நாட்டில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்களும், புதுச்சேரியில் 10 லட்சத்து 26 ஆயிரத்து 699 வாக்காளர்களும் நாளை வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மலை நகரமாக இருக்கக்கூடிய கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல முடியாத பல்வேறு கிராமங்கள் உள்ளன. குறிப்பாக, 400 வருடங்கள் பழமையாக உள்ள வெள்ளைகெவி, மஞ்சம்பட்டி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களுக்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், இன்று கொடைக்கானல் வழியாக வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

அப்பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல முடியாத காரணத்தால், குதிரைகள் மூலம் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி இன்று நடைபெற்றது. அதன்படி, வாக்கு இயந்திரங்கள் மற்றும் நாளை தேர்தலுக்கு உபயோகப்படுத்தக் கூடிய பொருட்கள் அனைத்தையும் குதிரைகளில் கட்டி, அந்த குதிரைகள் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

பொருட்களைக் கொண்டு செல்லும் குதிரைகளுடன் தேர்தல் அலுவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரும் பலத்த பாதுகாப்புடன் சென்றனர். சவாலாக இருக்கக்கூடிய இந்த பணியில் பல்வேறு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், நாளை 6 மணிக்கு தேர்தல் முடிவடைந்த பிறகு, வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு இயந்திரங்கள், வாக்கு என்னும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நாளை வாக்குப்பதிவு.. சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க பலத்த ஏற்பாடு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.