ETV Bharat / state

"இரண்டாவது முறையாக விடுதலை பெறுவதாக நினைத்து வாக்களியுங்கள்" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Campaign: இரண்டாவதாக விடுதலை பெறுகிறோம் என ஏப்ரல் 19ஆம் தேதியை நினைத்து திமுகவிற்கு வாக்களியுங்கள் எனத் தேனி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

theni
தேனி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 8:48 PM IST

தேனி: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து இன்று (ஏப்.14) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரம் தேனி மாவட்டம் கம்பம் நகரின் வடக்குப்பட்டி பகுதி, வஉசி திடல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "2019 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் ஒரே ஒரு தவறு நடந்தது. அது என்னவென்றால் தேனி தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெறவில்லை.

எனது சொந்த தொகுதியில் கழக வேட்பாளர் தோல்வியுற்றது மிகவும் வருத்தமாக இருந்தது. பாஜகவின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி 5ஆண்டுகள் தேவைக்காக அன்றைய வேட்பாளர் ரவீந்தரநாத்தை வெற்றி பெற வைத்தார்கள். கடந்த முறை இந்த தொகுதியை விட்டுவிட்டீர்கள். ஆனால் இம்முறை நமது வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெற வைப்பீர்கள் என நம்புகிறேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இன்றைக்கு நாட்டையே கொடூரமான பாதைக்குக் கொண்டு சென்று 10 ஆண்டுக்கால ஆட்சியில் பொருளாதாரத்தை முடக்கி வேலை வாய்ப்பின்மையை அதிகரித்துள்ளனர். மனித உரிமையைப் பறித்து, மாநில நீதி உரிமைகளையும், சுயாட்சி முறையையும் அதள பாதாளத்தில் தள்ளி பாசிச சர்வாதிகள் நாட்டையே தவறான பாதையில் கொண்டு செல்கின்றனர்.

இவர்களை ஜூன் 4ஆம் தேதிக்குப் பின்னர் ஒரு நாள் நாட்டை ஆட்சி செய்ய விட்டாலும், சுயமரியாதை, நல்லிணக்கம், சமத்துவம் என்பதெல்லாம் விரைவில் அழிந்துவிடும். பாசிச பாஜகவின் இலகே இதுதான். இந்த தேர்தலில் நல்லவர்கள், வல்லவர்கள் என்பதைத் தாண்டி தவறானவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது. அதனை நாம் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

அதிமுக சொல்கிறார்கள் பாஜகவிடம் சேரவில்லை என்று, ஜெயலலிதா இருந்தபோது நான் ஒரு நாள் கூட பாஜகவில் கூட்டணி வைக்க மாட்டேன் என கூறினார். ஆனால் அவர் மறைவுக்குப் பின்னர் இவர்கள் பாஜகவுடன் இணைந்து 4 ஆண்டுகள் தொடர்பிலிருந்தனர்.

அவர்களுக்கு அடிமையாகி ஆட்சியை நடத்திய பிறகு திடீரென்று அதிமுகவினருக்குச் சுயமரியாதை சுய சிந்தனை உள்ளிட்டவை வருகிறது. எனவே இரண்டாவதாக விடுதலை பெறுவதாக ஏப்ரல் 19ஆம் தேதியைக் கருதி திமுகவிற்கு வாக்களியுங்கள்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: தமிழக வானிலை நிலவரம் : தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TAMIL NADU WEATHER REPORT

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.