ETV Bharat / state

பெட்ரோல் பங்க் லாக்கரில் தொடர் திருட்டு.. ரூ.2 லட்சத்தை அபேஸ் செய்த ஊழியர்! - Aruppukottai Petrol Bulk theft

Aruppukottai Petrol Bulk theft: அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தொடர் திருட்டில் ஈடுபட்டு ரூ.2 லட்சத்திற்கும் மேல் கொள்ளையடித்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சி
திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 3:58 PM IST

விருதுநகர்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள கீழ முடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர் பெருமாள்சாமி (35). இவர் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் அமைந்துள்ள மண்டபசாலை அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு கமுதி, கீழ ராமநதியை சேர்ந்த செந்தில்குமார் மேனேஜராகவும், காளையார் கரிசல்குளத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ், கீழ முடிமன்னார் கோட்டையை சேர்ந்த முருகேசன் உள்பட நான்கிற்கும் மேற்பட்ட நபர்கள் ஊழியர்களாகவும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் பெருமாள்சாமியின் தந்தை சர்க்கரை நாயக்கர் நவதானிய வியாபாரம் செய்துவரும் நிலையில் தொழில் நேரம் போக பெட்ரோல் பங்கில் விற்பனையை கவனித்து வந்துள்ளார். பெட்ரோல் விற்பனை செய்த பணத்தை பங்கில் உள்ள அறை லாக்கரில் வைப்பது வழக்கம்.

திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும் அறையின் லாக்கர் சாவியானது சர்க்கரை நாயக்கர் வசம் இருந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க் அறை லாக்கரில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம் திடீரென காணாமல் போனது குறித்து பங்க் ஊழியர்களிடம் சர்க்கரை நாயக்கர் கேட்டுள்ளார். அதற்கு தங்களுக்கு எதுவும் தெரியாதென ஊழியர்கள் கூறியுள்ளனர். அப்போது பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்த ஊழியரான பிரவீன்ராஜ் திடீரென வேலையை விட்டு நின்றதாக தெரிய வருகிறது.

இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் கடைசியில் பிரவீன்ராஜ் மீண்டும் பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் பங்கில் மீண்டும் அடிக்கடி பணம் திருடு போவது தொடர் கதையாகி வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சர்க்கரை நாயக்கர் பங்கில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்துள்ளார்.

இதையும் படிங்க: தாம்பரம் பஸ் ஸ்டாப்பில் செல்போன் திருட்டு.. 17 செல்போன்கள் பறிமுதல்.. 5 பேர் கைது!

அப்போது இரவு தூங்கும் நேரத்தில் சர்க்கரை நாயக்கரின் சட்டைப்பையில் பிரவீன்ராஜ் பணத்தை திருடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனைத் தொடர்ந்து கடந்த 8 மாதத்திற்கு முன்பும், பிரவீன்ராஜ் மீண்டும் வேலைக்கு சேர்ந்த அக்.30 முதல் செப்.13 வரையிலான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பல நாட்களாக பிரவீன்ராஜ் பணத்தை திருடியதும், தற்போது வரை சுமார் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலான ரொக்கப்பணம் காணாமல் போனதும் தெரிய வந்தது.

இதையடுத்து பிரவீன்ராஜை தொடர்பு கொண்டபோது அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆப் ஆக இருந்த நிலையில் பங்கில் பணம் திருடியது குறித்து சர்க்கரை நாயக்கர் ம.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வுகள் செய்தபோது பிரவீன்ராஜ் பணத்தை திருடியது உண்மையென விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து ம.ரெட்டியாபட்டி போலீசார் பிரவீன்ராஜை மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பங்கில் ஊழியர் திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.