ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! வெற்றி யாருக்கு? - Vikravandi ByElection Result 2024 - VIKRAVANDI BYELECTION RESULT 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Etv Bharat
Vikravandi By Election Results (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 6:36 AM IST

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை.13) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், பகல் 12 மணிக்குள் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூலை 10ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 82 புள்ளி 48 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், இன்று (ஜூலை.13) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணியும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் பணிக்கு கிராம உதவியாளர்கள், இதர பணிகளுக்காக வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், இதர பணியாளர்கள் என மொத்தம் 150 பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மதுரை கிருதுமால் நதியைக் காக்க வேண்டிய தேவை என்ன? - நீரியல் ஆய்வாளர் கூறும் முக்கிய சான்றுகள்! - Madurai Kirudhumal River

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.