ETV Bharat / state

பாதுஷா விநாயகர்! காமாட்சி விளக்கு விநாயகர்! பல்வேறு தோற்றத்தில் சென்னையை கலக்கும் யானைமுகன்! - Special badusa vinayagar statue

Special Badusa Vinayagar Statue: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சிஐடி நகரில் வித்தியாசமான முறையில் பாதுஷா செய்யக்கூடிய மூலப் பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல்வேறு தோற்றத்தில் விநாயகர் சிலைகள்
பல்வேறு தோற்றத்தில் விநாயகர் சிலைகள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 7:41 PM IST

சென்னை: இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் விநாயகர் சிலை வழிபாடானது துவங்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் சென்னை சிஐடி நகரில் வித்தியாசமான முறையில் பாதுஷா செய்யக்கூடிய மூலப் பொருட்களால் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தோற்றத்தில் விநாயகர் சிலைகள் (Credits- ETV Bharat Tamil Nadu)

மேலும் அந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கற்பூர தீபாரதனை காடப்பட்டது. இந்த விநாயகர் சிலை குறித்து அப்பகுதியை சேர்ந்த பாலு கூறுகையில், “ வருடந்தோறும் இந்த இடத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறோம். கடந்த வருடம் விநாயகர் சிலையை மைசூர் பாகுவால் செய்தோம். இந்த வருடம் பாதுஷா செய்வதற்கு தேவையான உணவுப்பொருட்களை வைத்து செய்துள்ளோம்.

இந்த விநாயகர் சிலை 250 கிலோ உணவுப்பொருட்களால் உருவாக்கப்பட்டது. சர்க்கரை, மைதா, முந்திரி, திராட்சை, நிலக்கடலை, பொட்டுக்கடலை, இனிப்பு பாகு, செரி பழம் ஆகிய பொருட்களை வைத்து செய்துள்ளோம். விநாயகர் சிலையின் உயரமானது 9 அடி அளவிலும், பீடத்தோடு சேர்த்து மொத்தம் 12 அடி அளவிலும் செய்தோம். விநாயகரின் சிலையின் பின்பு கரும்பை வைத்து அலங்கரித்துள்ளோம்” என்றார்.

அதேபோல் சென்னை கொளத்தூர் பெரவள்ளூர் சாலையில் விரலி மஞ்சளால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும்

சென்னை கொளத்தூர் பூம்புகார் பகுதியில் 6100 ஆரத்தி தட்டுகள் மற்றும் 500 காமாட்சி அம்மன் விளக்குகளை வைத்து 42 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ”பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது” - உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.