ETV Bharat / state

வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களை பெற சிறப்பு முகாம்; விழுப்புரம் கலெக்டர் அறிவிப்பு! - VILLUPURAM CERTIFICATE CAMP

ஃபெஞ்சல் புயலின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்த நிலையில் வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக டிசம்பர் 13,14 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.

விழுப்புரம் ஆட்சியர் சி.பழனி, வெள்ள பாதிப்பு கோப்புப் படம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி, வெள்ள பாதிப்பு கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 4:13 PM IST

விழுப்புரம்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி முதல் ஃபெஞ்சல் புயலின் காரணமாக கனமழை பெய்தது. இதில் அதிகளவு மழை பதிவான இடமாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது. இதில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்த இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரணப் பணிகளை விரைந்து நடத்தப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பி வருகிறது. இந்த நிவாரணப் பணிகளில் ’மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும்” என கடந்த டிச.3ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களில் எதிர்வரும் 13.12.2024 (வெள்ளிக்கிழமை) மற்றும் 14.12.2024 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களிலும் பின்வரும் அட்டவணைப்படி முகாமை நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த முகாமானது 13.12.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் பின்வருமாறு.

  1. விழுப்புரம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வட்டாட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம்.
  2. கண்டமங்கலம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கண்டமங்கலம்.
  3. விக்கிரவாண்டி குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வட்டாட்சியர் அலுவலக வளாகம், விக்கிரவாண்டி.
  4. சித்தலம்பட்டு குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சித்தலம்பட்டு.
  5. வானூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வட்டாட்சியர் அலுவலக வளாகம், வானூர்.
  6. கிளியனூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: கிளியனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலம், கிளியனூர்.
  7. கண்டாச்சிபுரம் முகையூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வட்டாட்சியர் அலுவலக வளாகம், கண்டாச்சிபுரம்.
  8. திருவெண்ணெய்நல்லூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், திருவெண்ணெய்நல்லூர்.
  9. ஆரசூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசூர் (இ) குமாரமங்கலம்.
  10. மரக்காணம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வட்டாட்சியர் அலுவலக வளாகம், மரக்காணம்.
  11. சிறுவாடி குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சிறுவாடி.
  12. திண்டிவனம், வடசிறுவளுர் குறுவட்ட கிராமங்கள்: வட்டாட்சியர் அலுவலக வளாகம், திண்டிவனம்.
  13. ஆவணிப்பூர், ஒலக்கூர் குறுவட்ட கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், ஒலக்கூர்.
  14. செஞ்சி, சத்தியமங்கலம் குறுவட்ட கிராமங்கள்: வட்டாட்சியர் அலுவலக வளாகம், செஞ்சி.
  15. வல்லம், மேல்ஒலக்கூர் குறுவட்ட கிராமங்கள்: வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வல்லம்.

இதையும் படிங்க: "ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி போதுமானதாக இல்லை" - வேல்முருகன் குற்றச்சாட்டு!

14.12.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரையில் முகாம் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் முகாம் நடைபெறும் இடங்களின் விவரம் பின்வருமாறு.

  1. காணை குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், காணை.
  2. வளவனூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கோலியனூர்.
  3. விக்கிரவாண்டி கஞ்சனூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கஞ்சனூர்.
  4. அன்னியூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அன்னியூர்.
  5. வானூர் உப்புவேலூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், உப்புவேலூர்.
  6. நெமிலி குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: நெமிலி வருவாய் ஆய்வாளர் அலுவலம், நெமிலி.
  7. கண்டாச்சிபுரம் அரகண்டநல்லூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரகண்டநல்லூர்.
  8. திருவெண்ணெய்நல்லூர் சித்தலிங்கமடம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சித்தலிங்கமடம்.
  9. மரக்காணம் பிரம்மதேசம் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பிரம்மதேசம்.
  10. திண்டிவனம் மயிலம், ரெட்டணை குறுவட்ட கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மயிலம்.
  11. தீவனூர் குறுவட்டத்தில் அடங்கிய கிராமங்கள்: வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தீவனூர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி நடைபெறும் மேற்குறிப்பிடப்பட்ட சிறப்பு முகாம்களில் அதி கனமழை மற்றும் வெள்ளத்தால் இழந்துவிட்ட பொது மக்கள் தாங்கள் இழந்துவிட்ட தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகள் உள்ளிட்ட வருவாய்த்துறையின் ஏனைய சான்றுகள் ஆகியவற்றின் நகல்களை பெற்று பயனடைந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.