ETV Bharat / state

சிறந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசின் விருது! - விண்ணப்பிப்பது எப்படி? - சமூக சேவகருக்கான விருது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 8:41 PM IST

Villupuram Collector : சுதந்திர தின விழாவின்போது வழங்கப்படும், சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி (photo credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சுதந்திர தின விழாவின்போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதலமைச்சர் அவர்களால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கும் மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

இவ்விருதுக்கு தகுதியானவர்கள், தமிழக அரசின் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.06.2024 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது" என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டின்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு: வெளியான முக்கிய அப்டேட்! - TNPSC GROUP 4 EXAM LATEST UPDATE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.