ETV Bharat / state

அரசு கட்டடத்தை தனி நபருக்கு பட்டா கொடுத்த விஏஓ சஸ்பெண்ட்.. தஞ்சாவூரில் நடந்தது என்ன? - thanjavur vao suspended

thanjavur vao suspended: தஞ்சாவூர் அருகே அரசு அங்கன்வாடி கட்டடத்தை தனி நபருக்கு பட்டா மாறுதல் செய்துகொடுத்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஏஓ, உதவியாளர் புகைப்படம்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஏஓ, உதவியாளர் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 11:31 AM IST

தஞ்சாவூர்: திருவோணம் தாலுகா இடையாத்தி வடக்கு கிராமத்தில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெயரில் புல எண் 67/9 ல் அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை அதே ஊரை சேர்ந்த தனிநபரின் பெயருக்கு கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் கிராம உதவியாளர் அன்பழகன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து முறைகேடாக சிட்டா, அடங்கல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர் தனது மகனுக்கு தான செட்டில்மெண்ட் ஆவணம் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் கிராம மக்கள் சார்பில் முறைகேடாக அரசு கட்டடத்தை பட்டா மாற்றம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ விசாரணை நடத்தினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ், மற்றும் கிராம உதவியாளர் அன்பழகன் ஆகியோர் முறைகேடாக அரசு கட்டடத்தை தனிநபருக்கு சிட்டா, அடங்கல் வழங்கியது உறுதியானது.

பின்னர், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் கிராம உதவியாளர் அன்பழகன் ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க - ரூ.2,500 லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.