ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு! - Vikravandi election PMK candidate

Vikravandi By Election PMK Candidate: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

PMKL
விக்கிரவாண்டி பாமக வேட்பாளர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 11:59 AM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14-இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 10 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இதுவரை தேர்தல் மன்னன் பத்மராஜன் உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில், பாமக வேட்பாளராக சி.அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, திமுக சார்பில் அன்னியூர் சிவா மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், இதுவரை அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் சார்பில் களமிறங்கும் மருத்துவர் அபிநயா.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.