சென்னை: தமிழ்நாடு முழுவதும் மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் பிறந்தநாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட்டப்படுகிறது. சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நிகழ்ச்சியின் போது, இனி தேமுதிக கட்சி அலுவகம் "கேப்டன் ஆலயம்" என அழைக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமதா விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, விஜயகாந்த் நினைவிடத்தில் அவரது முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது, துணை பொதுச்செயலாளர் சுதீஷ், மகன்கள் சண்முக பாண்டியன் மற்றும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், திரைவாழ்விலும் பொதுவாழ்விலும் அவர் நிகழ்த்திய சாதனைகளை நினைவுகூர்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
" இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே" என்ற கோட்பாட்டின் வழி வாழ்ந்த மனிதநேயப் பண்பாளர், தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த இடத்தைக் கொண்டவர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், மறைந்த அன்புச் சகோதரர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில்,… pic.twitter.com/FvUWfcD1cC
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) August 25, 2024
மநீம தலைவரும், நடிகருமான கமல் அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
— Kamal Haasan (@ikamalhaasan) August 25, 2024
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த்.
ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன். #CaptainVijayakanth @PremallathaDmdk…
தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு நடிகர் சங்கர் சங்கம் சார்பாக மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன், "தமிழ் சினிமாவில் உள்ள எளிய கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொண்டவர். தனது சமுதாய சேவைகளின் மூலம் நம்மிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் “பத்ம பூஷன் விஜயகாந்தின்” பிறந்த தினத்தில் நினைவு கூர்வோம்" என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சரத்குமார், நீங்காத நினைவுகளுடன் என்றும் ரசிக பெருமக்களின் இதயங்களில் வாழும், அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில், அவருடன் பயணித்த இனிய தருணங்களை எண்ணி நெகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதேபோன்று பலரும் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பலரும் கேப்டன் விஜயகாந்துடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்