ETV Bharat / state

விஜய் எதற்காக உங்கள் வீட்டுக்கு வந்தார்? விஜய பிரபாகரன் ஓபன் டாக்! - Vijaya Prabhakaran about Vijay

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 8:40 PM IST

Vijaya Prabhakaran: தனக்கு எப்போது கட்சிப் பதவி வழங்க வேண்டும் என்பது தேமுதிகவின் மூத்த உறுப்பினர்களுக்குத் தெரியும் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Vijay
விஜய பிரபாகரன் மற்றும் விஜய் (Credits - Jagadish 'X' Page)

தருமபுரி: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், இன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளின் புதுமனை புகுவிழா, காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன், “இன்று தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக கட்சியின் கொடியை ஏற்றி வைத்தேன்” என்றார். தொடர்ந்து, தேமுதிகவின் ஒரு தொண்டராகவே நீங்கள் இருக்கிறீர்கள். கட்சியின் முக்கிய பதவிக்கு எப்போது வரும் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “தொண்டர்கள் என்னை தம்பியாக அழைத்தார்கள். அவர்கள் மரியாதை ஏற்றுத் தான் நான் கட்சிக்கு வந்தேன். கேப்டன் விஜயகாந்த் காலமானார், தேர்தல் வந்தது, வேட்பாளராக தேர்தலைச் சந்தித்தேன். இப்பொழுது தான் எனது அம்மா ஒரு பொறுப்புக்கு வந்திருக்கிறார். கட்சிப் பொறுப்பு குறித்து கட்சித் தலைமை சேர்ந்து முடிவெடுக்க வேண்டும்.

போலி பேச்சு எனக்கு பேச தெரியாது. பொறுப்பு வழங்கினாலும் தலைவணங்கி ஏற்றுக்கொள்ளத் தயார். மூத்த நிர்வாகிகளுக்கு தெரியும், எனக்கு எப்பொழுது கட்சிப் பதவி தர வேண்டும் என்று. பொறுப்புக்காக என்றும் தயாராக இருக்கிறேன். இப்பொழுது கட்சியின் தொண்டனாக, கேப்டன் விஜயகாந்தின் மகனாக கட்சிப் பிரமுகர்கள் அழைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

விஜய் எங்கள் வீட்டிற்கு வந்த போது கோட் படம் தொடர்பாகத்தான் பேச வந்தார். கட்சி பற்றியோ, அரசியல் பற்றியோ ஏதும் பேசவில்லை. விஜயகாந்த் மீது வைத்துள்ள மரியாதைக்காகச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்காக வந்து சந்தித்தார்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்த கோட் டீம்.. என்னவா இருக்கும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.