ETV Bharat / state

“காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்..” - தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்! - TVK MAANAADU

மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 11:00 AM IST

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, நாளை (அக்.27) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் முடிவுபெற்று உள்ள நிலையில், விஜய் தனது தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோளை வைத்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது தனிப்பட்ட எக்ஸ் தளப் பக்கத்தில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.

இதையும் படிங்க: குதிரை வண்டி முதல் ஏசி பஸ் வரை.. படையெடுக்கும் தொண்டர்கள்.. தவெக மாநாட்டுப் பணிகள் தீவிரம்!

ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கட்சித் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.