சென்னை: பிரபல நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் கட்சியைத் தொடங்கினார். இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக விஜய் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தினார். மேலும், தவெகவின் முதல் மாநில மாநாடு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் எனவும் விஜய் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி கோரினார். இதற்கு விழுப்புரம் காவல்துறை சில நிபந்தனைகளுடன் அனுமதியும் அளித்தது. இருப்பினும், மாநாடு தேதியில் மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து த.வெ.க தலைவர் விஜய், வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லட்டு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு... பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட கார்த்தி! - karthi apologized for laddu issue
இந்நிலையில் த.வெ.க மாநாடு நடைபெறும் நாளன்று தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநாடு நடைபெறும் நாளன்று தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1.தோழர்கள் மது அருந்திவிட்டு மாநாடு பகுதிக்கு வர வேண்டாம்.
2. இடத்தை மிக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
3. ரயில் தண்டவாளம் மற்றும் கிணறு போன்ற ஆபத்தான இடங்களில் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
4.சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது.
5. பெண்களுக்கு மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
6.அதிகாரியிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
7. மருத்துவக் குழு மற்றும் தீயணைப்பு துறைக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.
8. வண்டியில் வேகமாகவும் அல்லது சாகசங்கள் போன்றவற்றில் ஈடுபடக்கூடாது.
9. நான்கு சக்கர வாகனங்களில் வரும் தோழர்கள் தொங்கி கொண்டு வர வேண்டாம்.
10.பெரிய வாகனங்களில் வரும் தோழர்கள்
முன்கூட்டியே வர திட்டமிடுங்கள் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.