ETV Bharat / state

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு 'அம்பேத்கர் சுடர்' விருது - திருமாவளவன் வெளியிட்ட விசிக விருது பட்டியல்! - VCk awards - VCK AWARDS

VCK Awards: 2024 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கும், மார்க்ஸ் மாமணி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனுக்கும் வழங்கப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 1:46 PM IST

சென்னை: 2024 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ் ராஜ்-க்கு வழங்கப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு, ‘அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு’ ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கி வருகிறோம்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள் பெறுவோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை திரைப்படக் கலைஞரும், மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான, பிரகாஷ் ராஜ்-க்கும், ‘பெரியார் ஒளி விருதினை’ திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி-க்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

2024-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறுவோரின் பட்டியல் பின்வருமாறு:

விருது விருது பெறுவோர்
அம்பேத்கர் சுடர் பிரகாஷ் ராஜ் (திரைப்படக் கலைஞர்)
பெரியார் ஒளி வழக்கறிஞர் அருள்மொழி (திராவிடர் கழகம் பிரச்சாரச் செயலாளர்)
மார்க்ஸ் மாமணி இரா. முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்)
காமராசர் கதிர் பேராயர் எஸ்றா சற்குணம் (இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர்)
அயோத்திதாசர் ஆதவன் பேராசிரியர். ராஜ்கௌதமன்
காயிதேமில்லத் பிறை எஸ்.என். சிக்கந்தர் (மேனாள் மாநிலத் தலைவர், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா)
செம்மொழி ஞாயிறுஎ.சுப்பராயலு, கல்வெட்டியலறிஞர்

விசிக விருதுகள் வழங்கும் விழா 25.05.2024 அன்று சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது” என்று உறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: 5 நாள் பயணமாக கொடைக்கானல் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - MK Stalin Kodaikanal Visit

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.